/* */

10ம் வகுப்பு பொதுத்தேர்வு: திருவண்ணாமலையில் 33,112 மாணவர்கள் எழுதினர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 33 ஆயிரத்து 112 மாணவ, மாணவிகள் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வை எழுதினர்.

HIGHLIGHTS

10ம் வகுப்பு பொதுத்தேர்வு: திருவண்ணாமலையில் 33,112 மாணவர்கள் எழுதினர்
X

பைல்படம்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 33 ஆயிரத்து 112 மாணவ மாணவிகள் எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வை எழுதினர்.

தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நேற்று தொடங்கியது. இந்த தேர்வு வருகிற 30-ந் தேதி (திங்கட்கிழமை) வரை நடைபெற உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு பள்ளி, தனியார் பள்ளி, நிதியுதவி பெறும் பள்ளி என 504 பள்ளிகளை சேர்ந்த 17 ஆயிரத்து 318 மாணவர்களும், 16 ஆயிரத்து 75 மாணவிகளும் என 33 ஆயிரத்து 393 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தனர். அதேபோல் தனித் தேர்வர்கள் 1171 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

இந்த தேர்விற்காக பள்ளித் தேர்வர்களுக்கான 139 தேர்வு மையங்களும், தனித்தேர்வர்களுக்கான 5 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டு இருந்தன. தேர்வுக்கான அடிப்படை வசதிகள் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மாணவர்கள் தேர்வு அறைக்குள் செல்போன் போன்ற எலக்ட்ரானிக் பொருட்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. முதல் நாளான நேற்று பள்ளி மாணவர்கள் மற்றும் தனிதேர்வர்கள் என 34 ஆயிரத்து 371 மாணவர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். இதில் 33 ஆயிரத்து 112 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். 1259 பேர் தேர்வு எழுத வரவில்லை.

Updated On: 7 May 2022 1:40 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இரு விழிகள் எழுதும் ஒரு புதிய கவிதை, காதல்..!
  2. லைஃப்ஸ்டைல்
    மகளின் முதல் ஹீரோ, 'அப்பா'.!
  3. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மாலை 3 மணி நிலவரம்: 59.55 சதவீதம்...
  4. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் மாலை 3 மணி நிலவரப்படி 54.13 சதவீத...
  5. லைஃப்ஸ்டைல்
    பிரெண்டி உள்ள பையனுக்கு லைப் கேரண்டி உண்டு..!
  6. லைஃப்ஸ்டைல்
    நீ இருக்கும்போது அறியாமல் விட்டுவிட்டேன் அன்னையே..! உன் அருமை...
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, மின் தடையால், வாக்குப்பதிவு தேக்கம்..!
  8. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வாக்கு அளித்தார்...!
  9. ஈரோடு
    கொளுத்தும் வெயில்: ஈரோடு தொகுதியில் 1 மணி வரை 42.23 சதவீத...
  10. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மதியம் 1 மணிக்கு 46.31 சதவீதம்...