/* */

திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் ரஜினிகாந்த் பட சூட்டிங்

ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் லால் சலாம் படப்பிடிப்பு திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

HIGHLIGHTS

திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் ரஜினிகாந்த்  பட சூட்டிங்
X

திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில்  ரஜினிகாந்த் பட சூட்டிங் நடைபெற்றது.

2012-ல் வெளியான 3 படம் மூலம் இயக்குனராக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அறிமுகமானார். இந்த படத்தில் தனுஷ், சுருதிஹாசன் ஜோடியாக நடித்து இருந்தனர். அதனை தொடர்ந்து வை ராஜா வை படத்தையும் ஐஸ்வர்யா இயக்கினார். இதில் கவுதம் கார்த்திக், பிரியா ஆனந்த் ஜோடியாக நடித்தனர். அதன் பிறகு பயணி என்ற இசை வீடியோ ஆல்பத்தை இயக்கி நல்ல வரவேற்பை பெற்றார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது 'லால் சலாம்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். இப்படம் 2023-ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் நீதிமன்ற வளாக காட்சிகள் திருவண்ணாமலையில் நேற்றும் இன்றும் படமாக்கப்பட்டன.

இதற்கான படப்பிடிப்பு, திருவண்ணாமலை தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்றது.இதற்காக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உள்ளிட்ட திரைப்பட குழுவினர் குவிந்துள்ளனர். இவர்களது பாதுகாப்புகாக பவுன்சர்களும் அதிகளவில் குவிக்கப்பட்டனர்.

படப்பிடிப்புக்காக, திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலக பெயர் பலகை மாற்றப்பட்டு, சங்கராபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் என்ற பெயர் பலகை வைக்கப்பட்டன. இணை சார் பதிவாளர் அலுவலகம் செல்லும் பாதையில் இருந்த பெட்டிக் கடைகள் அகற்றப்பட்டன. படப்பிடிப்பு நடைபெறும் தகவல் பரவியதால், வட்டாட்சியர் அலுவலக வளாகத்துக்கு பொதுமக்கள் திரண்டனர். அப்போது அவர்கள், படப்பிடிப்பு காட்சிகளை தங்களது செல்போன்களில் வீடியோ மற்றும் படம் பிடித்தனர்.

செல்போனில் படம் பிடிக்க முயன்ற பொதுமக்களை பவுன்சர்கள் தடுத்தனர், செல்போனை பறிக்கவும் முயற்சி நடந்தது ,இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டு பரபரப்பு நிலவியது.

பிறகு பவுசர்கள் செல்போனை பொதுமக்களிடமிருந்து பிடுங்கி அங்கு எடுக்கப்பட்ட காட்சியை மட்டும் டெலிட் செய்தனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை தினம் விடுமுறை தினம் என்பதால் உழவர் சந்தைக்கு ஏராளமானோர் காலையில் வருகை தந்தனர்.

ஆனால் தாலுகா அலுவலக வளாகத்தில் உழவர் சந்தை அமைந்துள்ளதால் ஷூட்டிங்கிற்காக தாலுக்கா அலுவலகத்திற்கு பொதுமக்கள் வர முடியாதபடி கயிறு கட்டி தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர் .

இந்த தாலுகா அலுவலக வளாகத்தில் மாணவியர்கள் தங்கும் விடுதி ,உழவர் சந்தை, சர்வேயர் அலுவலகங்கள், வட்ட வழங்கல் அலுவலகம், சிறார் நீதிமன்றம் ,பத்திரப்பதிவு அலுவலகம் ,அரசு இ சேவை மையம் ,அரசு கேபிள் டிவி அலுவலகம் , கிளைச் சிறைச்சாலை, சார் கருவுலகம் , மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் , இளஞ்சிரார்கள் குழுமம் ஆகியவை இயங்கி வரக்கூடிய நிலையில் சினிமா சூட்டிங் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது ஏன் என பொதுமக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

பொது மக்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் ஷூட்டிங்கை வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் , மக்களுக்கு வாழ்வாதாரமாக உள்ள வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலக வளாகத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்குவதை மாவட்ட நிர்வாகம் தவிர்க்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர்.

Updated On: 19 March 2023 11:12 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி