/* */

லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற பெண் தலைவர் கைது

போளூரில் ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற பெண் தலைவர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற பெண் தலைவர் கைது
X

 லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்த ஊராட்சி மன்ற தலைவர் ஜீவா.

போளூரில் உயிரிழந்த கணவர் செய்து வந்த டேங்க் ஆபரேட்டர் பணியை மனைவிக்கு வழங்க முன் பணமாக ரூ.25 ஆயிரம் லஞ்சம் பெற்ற எடப்பிறை ஊராட்சி மன்றத் தலைவி ஜீவாவை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே எடப்பிறை கிராமத்தை சேர்ந்தவர் பராசக்தி (வயது 42), இவரது கணவர் கோவிந்தசாமி. இவர் எடப்பிறை ஊராட்சியில் கடந்த 15 ஆண்டுகளாக டேங்க் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 31.12.2022 அன்று உடல்நலக்குறைவால் இறந்து விட்டார்.

இவரது மறைவுக்கு பிறகு, அவரது பணியை அவரது மனைவி பராசக்தி தொடர்ந்துள்ளார். இவருக்கு கடந்த 3 மாதமாக ஊதியம் வழங்கவில்லை.

மேலும் அவர் செய்து வந்த பணியை எனக்கு கருணை அடிப்படையில் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

அதற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜீவா உனக்கு டேங்க் ஆபரேட்டர் வேலை தர வேண்டும் என்றால் ரூ.5 லட்சம் தர வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு பராசக்தி எனக்கு ஏற்கனவே 4 மகள்கள் உள்ளனர். மேலும் நான் வறுமையில் வாடுகிறேன். ஏற்கனவே இதே ஊரில் டேங்க் ஆபரேட்டராக வேலை செய்து இறந்த 2 பேரின் குடும்பத்திற்கு வேலை போட்டு கொடுத்து உள்ளீர்கள். அதேபோல் எனக்கு வேலை கொடுங்கள் என்று கேட்டுள்ளார்.

இதற்கு ரூ.5 லட்சம் கொடுக்க வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவி ஜீவா நெருக்கடி கொடுத்துள்ளார். வேண்டுமென்றால் ரூ.50 ஆயிரத்தை குறைத்துக் கொண்டு 4.50 லட்சத்தை கொடுங்கள். மேலும் முன்பணமாக ரூ.25 ஆயிரம் கொடுத்தால் மட்டும் உங்களுக்கு வேலை. இல்லை என்றால் வேறு ஒருவருக்கு வேலையை வழங்கி விடுவேன் என்று கூறியுள்ளார்.

இதனால் மனவேதனை அடைந்த பராசக்தி தன் அண்ணன் ராஜனிடம் கூறியுள்ளார். அவர் ஊராட்சி மன்ற தலைவர் ஜீவாவிடம் கேட்டபோதும் அதே பதிலை கூறியுள்ளார். இதையடுத்து பணம் தயார் செய்து வருகிறோம் என்று பராசக்தி, ராஜன் ஆகியோர் சென்றுவிட்டனர்.

இதுகுறித்து பராசக்தியும், ராஜனும் திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி வேல்முருகனிடம் புகார் மனு அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவரது தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ஹேமலதா, மைதிலி மற்றும் போலீசார் பராசக்தியிடம் ரூ.25 ஆயிரத்தை கொடுத்து அனுப்பி உள்ளனர்.

பின்னர் போளூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ஜீவாவிடம் ரூ.25 ஆயிரத்தை பராசக்தி கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஊராட்சி மன்ற தலைவர் ஜீவாவை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்து போன கோவிந்தசாமி அந்த டேங்க் கட்டுவதற்கு சொந்த இடத்தை தானமாக வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 1 April 2023 1:02 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் விறுவிறுப்பு: 2 மணி நேரத்தில் 12.88 சதவீதம்...
  2. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  3. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  4. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  5. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  6. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  7. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  10. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...