/* */

நெல் மூட்டைகளுடன் லாரி கிணற்றில் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் காயம்

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகா நல்லடிசேனை கிராமத்தில் லாரி கிணற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

HIGHLIGHTS

நெல் மூட்டைகளுடன் லாரி கிணற்றில் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் காயம்
X

நெல் மூட்டைகளுடன் கிணற்றில் கவிழ்ந்த லாரி. 

திண்டிவனத்தை சேர்ந்த வியாபாரிகள் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகா நல்லடிசேனை கிராமத்தில் விவசாயிகளிடம் இருந்து நெல் மூட்டைகளை கொள்முதல் செய்து, அதை ஒரு லாரியில் ஏற்றி அனுப்பி வைத்துவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டனர்.

லாரியில் 2 சுமைத்தூக்கும் தொழிலாளர்கள் உடன் வந்தனர். நல்லடிசேனை கிராமம் அருகே சென்ற போது திடீரென சாலையோரம் இருந்த கிணற்றில் நெல் மூட்டைகளுடன் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் லாரி டிரைவர் பிரபு லேசான காயம் அடைந்தார்.

லாரியில் வந்த திண்டிவனத்தை சேர்ந்த சுமைத்தூக்கும் தொழிலாளர்களான குப்பன் (வயது 45), குமார் (46) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். 3 பேரும் சேத்துப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி அளித்து, பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தேசூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று நெல் மூட்டைகளுடன் கவிழ்ந்து கிடந்த லாரியை பார்வையிட்டனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 18 May 2022 1:35 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  4. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  6. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  7. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு
  8. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
  9. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  10. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?