/* */

மின்சார திருத்த சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

சேத்துப்பட்டில் மின்சார திருத்த சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

மின்சார திருத்த சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
X

கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு போளுர் சாலையில் உள்ள தாலுகா அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. விவசாயிகள் தொழிலாளர் சங்க தாலுகா அமைப்பாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். விவசாயிகள் தொழிலாளர்சங்க தாலுக்கா பொருளாளர் சேகர் விவசாய தொழிலாளர் சங்க பொறுப்பாளர் அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மத்திய அரசின் 2020 மின்சார திருத்த சட்டத்தை வாபஸ் பெற வேண்டும்.மேலும் விவசாயிகளின் விளைபொருட்களை விலை நிர்ணயம் செய்ய குழுக்கள் அமைக்க வேண்டும். மேலும் டெல்லியில் 381 நாட்கள் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தினார்கள். இதில் 715 விவசாயிகள் உயிர்த்தியாகம் செய்தனர்.

இவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கியும் நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். மேலும் மத்திய அரசு விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தினர்.

அகில இந்திய விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் உதயகுமார் அகில இந்திய விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் வெங்கடேசன் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சிபிஎம் சேத்துப்பட்டு வட்டார கமிட்டி பொறுப்பாளர் ஆனந்தன் நன்றி கூறினார்.

Updated On: 22 March 2022 1:29 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    யாரிந்த ராஜா வெற்றி பிரபு..?
  2. லைஃப்ஸ்டைல்
    நண்பனே... எனது உயிர் நண்பனே ! நீண்ட நாள் உறவிது.. இன்று போல் என்றுமே...
  3. லைஃப்ஸ்டைல்
    உறவுகளை எப்படி வகைப்படுத்தலாம்..? தெரிஞ்சுக்கங்க..!
  4. திருவண்ணாமலை
    போக்குவரத்து போலீசாருக்கு தொப்பி, கூலிங் கிளாஸ் வழங்கிய போலீஸ்
  5. வீடியோ
    பிரதமராக மன்மோகன் சிங்கை தேர்ந்தெடுக்க காரணம்?#annamalai #annamalaibjp...
  6. இந்தியா
    இந்தியாவில் உள்ள ரவுடி இடங்கள் குறித்து தெரிந்துக்கொள்வோமா?
  7. லைஃப்ஸ்டைல்
    எதிர்பார்ப்பு நிறைவேறாவிட்டால், ஏமாற்றமே..!
  8. பொன்னேரி
    பொன்னேரி அருகே நடந்த கொலை கொள்ளை வழக்கில் 6 மணி நேரத்தில் இளைஞர் கைது
  9. கரூர்
    டெண்டர் நோட்டீஸ் நகலை காண்பித்து வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளர்...
  10. ஈரோடு
    தாளவாடி அருகே அரசு பேருந்து பயணிகளை மிரட்டிய ஒற்றை காட்டு யானை