/* */

நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை மனு அளித்த பேரூராட்சி மன்ற தலைவர்

போளூர் சிறப்பு நிலை பேரூராட்சிக்கு வருகை தந்த ஆரணி நாடாளுமன்ற உறுப்பினரிடம் பேரூராட்சி மன்ற தலைவர் கோரிக்கை மனு அளித்தார்.

HIGHLIGHTS

நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை மனு அளித்த பேரூராட்சி மன்ற தலைவர்
X

கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட விஷ்ணு பிரசாத் எம்.பி, உடன் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள்.

போளூர் சிறப்பு நிலை பேரூராட்சிக்கு வருகை தந்த ஆரணி மக்களவைத் தொகுதி உறுப்பினர் விஷ்ணு பிரசாத் இடம் பேரூராட்சி மன்ற தலைவர் ராணி சண்முகம் தலைமையிலான உறுப்பினர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில் போளூர் வழியாக வாரத்தில் மூன்று நாட்கள் செல்லும் மும்பை தாகூர் ரயிலை தினசரி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் போளூர் ரயில்வே நிலையத்தில் திருப்பதி மன்னார்குடி ரயில் , ராமேஸ்வரம் திருப்பதி விரைவு ரயில் , புதுச்சேரி ஹவுரா விரைவு ரயில் ஆகிய ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடலூர் வேலூர் கண்டோன்மென்ட் ரயிலை போளூர் வழியாக தினசரி இயக்க வேண்டும். போளூர் தபால் நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும். ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

திருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கு போளூர் வழியாக தினசரி ரயில் இயக்க வேண்டும்.

என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினரிடம் போளூர் பேரூராட்சி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கோரிக்கை மனுவை அளித்தனர்.

Updated On: 9 Dec 2022 1:18 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  2. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  3. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  4. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  5. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  6. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  7. ஈரோடு
    ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பேருந்தை வழிமறித்த யானையால்
  8. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  9. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  10. தமிழ்நாடு
    திருச்சி உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் ஆஜர்