திருவண்ணாமலை மாவட்டத்தில் அண்ணா பிறந்த நாள் விழா அதிமுக பொதுக்கூட்டங்கள்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர், செய்யாறு, ஆரணி பகுதிகளில் அண்ணா பிறந்த நாள் விழா அ.தி.மு.க. பொதுக்கூட்டங்கள் நடைபெற்றது

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
திருவண்ணாமலை மாவட்டத்தில் அண்ணா பிறந்த நாள் விழா அதிமுக பொதுக்கூட்டங்கள்
X

போளூரில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய நடிகை விந்தியா

திருவண்ணாமலை மாவட்டம் போளூர், செய்யாறு ,ஆரணி பகுதிகளில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது.

ஆரணி

திருவண்ணாமலை ஆரணியில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்துக்கு அ.தி.மு.க. மாவட்ட பொருளாளா் கோவிந்தராசன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் ஆரணி தொகுதி எம்.எல்.ஏ. சேவூா் ராமச்சந்திரன், மாவட்டச் செயலாளர் தூசி கே.மோகன், முன்னாள் அமைச்சா் முக்கூா் சுப்பிரமணியன், திரைப்பட இயக்குநா் பி.சௌந்தரராஜன் ஆகியோா் பேசினா்.

முன்னாள் அமைச்சா் சேவூா் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. பேசுகையில், ஆரணியில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது சூரிய குளம் சீரமைக்க ரூ.6.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் முதல் கட்டமாக ரூ. 1.40 கோடி விடுவிக்கப்பட்டதில் ரூ. 35 லட்சத்துக்கு மட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மீதித் தொகையை நகராட்சி நிா்வாகம் வேறு செலவினங்கள் செய்து விட்டு சூரியகுளம் திட்டத்தை கைவிட்டது. மேலும், நகரில் தாா்ச் சாலை அமைக்கவும், பக்கக் கால்வாய் கட்டவும் ரூ.8.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் முதல் கட்டமாக விடுவிக்கப்பட்ட ரூ.1.60 கோடிக்கு மட்டுமே பணிகள் செய்யப்பட்டு திட்டம் முழுமையாக முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. இவ்வாறு அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை கிடப்பில் போடப்பட்டுள்ளதைக் கண்டித்து விரைவில் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்றாா்.

கூட்டத்தில் அ.தி.மு.க. நகரச் செயலாளர் அசோக்குமாா், ஒன்றியச் செயலாளர்கள் சங்கா், திருமால், ஜெயப்பிரகாசம், நகா்மன்ற துணைத் தலைவா் பாரி பாபு, மாவட்ட இணைச் செயலா் விமலா மகேந்திரன், நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

போளூர்

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் அறிஞா் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் அக்ரி கிருஷ்ணமூா்த்தி எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளராக நடிகை விந்தியா கலந்து கொண்டு பேசினாா்.

கூட்டத்தில் மாவட்ட இணை செயலாளர் நாராயணன், ஒன்றியச் செயலா்கள் ஜெயசுதா, ராகவன், ஒன்றிய செயலாளர்கள் மற்றும் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

செய்யாறு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நகர அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா மற்றும் மதுரை எழுச்சி மாநாட்டின் தீர்மான விளக்க பொதுக்கூட்டம் மண்டி தெருவில் நடைபெற்றது. நகர கழக செயலாளர் வெங்கடேசன் தலைமை வகித்தார். நகர அவைத் தலைவர் ஜனார்த்தனம், ரவிச்சந்திரன், அருணகிரி, பூக்கடை கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட கழக செயலாளர் தூசி கே.மோகன், முன்னாள் அமைச்சர்கள் முக்கூர் சுப்பிரமணியன், சேவூர் எஸ். ராமச்சந்திரன் கழக அமைப்பு செயலாளர் மைதிலி திருநாவுக்கரசு, கழகப் பேச்சாளர் சிட்கோ சீனு ஆகியோர்கள் கலந்து கொண்டு அண்ணாவின் அரசியல் வாழ்வு, அரசியல் பண்பாடு, நாகரிகம், தற்போதைய ஆட்சியின் அவலங்களை சுட்டிக்காட்டி பேசினர்.

இக்கூட்டத்தில் மாவட்ட இணை செயலாளர் விமலா மகேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் அரங்கநாதன், மகேந்திரன், குணசீலன், துரை, மற்றும்தணிகாசலம், சுரேஷ், உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Updated On: 18 Sep 2023 1:31 PM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    சாலை விபத்தில் பெண் பலி உள்ளிட்ட குமாரபாளையம் பகுதி க்ரைம் செய்திகள்
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி பகுதியில் 106 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை நடவடிக்கை
  3. குமாரபாளையம்
    அகில இந்திய மல்யுத்த போட்டி: குமாரபாளையம் பயிற்சியாளர் நடுவராக
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையத்தில் விபத்தில் சிக்கிய சரக்கு ரயில்
  5. ஈரோடு மாநகரம்
    ஈரோட்டில் காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறப்பு
  6. ஈரோடு மாநகரம்
    ஈரோடு கனி மார்க்கெட் மீண்டும் செயல் பட தொடங்கியதால் மகிழ்ச்சியில்...
  7. தென்காசி
    தென்காசியில் ஏ.ஐ.சி.சி.டி.யு. தொழிற்சங்கத்தின் மாவட்ட மாநாடு
  8. சினிமா
    நடிகை ஸ்ரீதேவி மரணம் தொடர்பாக கணவர் போனி கபூர் மீண்டும் சர்ச்சை
  9. தென்காசி
    தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு பணம் அனுப்பிய பொதுமக்கள்
  10. ஆலங்குளம்
    மிளா தாக்கி இளைஞர் உயிரிழப்பு: வனவிலங்குகளை கட்டுப்படுத்த கோரிக்கை