/* */

கீழ்பெண்ணாத்தூரில் தரம் உயர்த்தப்பட்ட மின் மாற்றி தொடக்கி வைப்பு

கீழ்பெண்ணாத்தூரில் ரூ.1.25 கோடியில் தரம் உயா்த்தப்பட்ட திறன் மின்மாற்றியைசட்டப் பேரவை துணை சபாநாயகர் இயக்கி வைத்தாா்

HIGHLIGHTS

கீழ்பெண்ணாத்தூரில் தரம் உயர்த்தப்பட்ட மின் மாற்றி தொடக்கி வைப்பு
X

பொத்தானை அழுத்தி மின்மாற்றியை இயக்கி வைத்த துணை சபாநாயகர், பிச்சாண்டி, ஆட்சியா் முருகேஷ்

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் துணை மின் நிலையத்தில் ரூ.1.25 கோடியில் தரம் உயா்த்தப்பட்ட திறன் மின்மாற்றியை தமிழக சட்டப் பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி இயக்கி வைத்தாா்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூா் துணை மின் நிலையத்தில் ஏற்கெனவே இருந்த 16 மெகாவாட் திறன் மின்மாற்றி 25 மெகாவாட்டாக தரம் உயா்த்தப்பட்டது.இதை சென்னையில் இருந்தபடியே, காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

இதையடுத்து, கீழ்பென்னாத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் முருகேஷ் தலைமை வகித்தாா். திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி, திருவண்ணாமலை மின் வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் பழனிராஜு, செயற்பொறியாளா் (கிழக்கு) ராஜசேகரன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் ஆராஞ்சி ஆறுமுகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கீழ்பென்னாத்தூா் உதவிச் செயற்பொறியாளா் இளையராஜா வரவேற்றாா். கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக சட்டப்பேரவை துணை தலைவருமான கு.பிச்சாண்டி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு ரூ.1 கோடியே 24 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பில் தரம் உயா்த்தி அமைக்கப்பட்ட புதிய திறன் மின்மாற்றி மையத்தை ரிப்பன் வெட்டி, குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தாா். பிறகு, பொத்தானை அழுத்தி மின்மாற்றியை இயக்கி வைத்தாா்.

மேலும் கீழ்பெண்ணாத்தூர் தொகுதி துரிஞ்சாபுரம் ஒன்றியம் தேவனாம்பட்டு கிராமத்தில் ரூபாய் 28 லட்சம் மதிப்பீட்டில் புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்கான பணிகளை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், வட்டார வளா்ச்சி அலுவலா் பாண்டியன், கீழ்பென்னாத்தூா் வட்டாட்சியா் சாப்ஜான், தலைமையிடத்து துணை வட்டாட்சியா் வேணுகோபால், ஒன்றிய கழக செயலாளர் ராமஜெயம், ஒன்றிய குழு தலைவர் தமயந்தி ஏழுமலை , மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் , ஊராட்சி மன்ற தலைவர்கள் , பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 21 May 2023 12:56 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    துக்கம் என்று வந்துவிட்டால், அக்கா வந்து முதலில் நிற்பாள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    பெண்களின் அழகுக்கு அழகு சேர்க்கும் பாரம்பரிய ஆபரணங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பிரகாசமாக மின்னுவதற்கான இயற்கை வழிகள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  4. நாமக்கல்
    கோடைக்காலத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள்: 30ம் தேதி இலவச...
  5. லைஃப்ஸ்டைல்
    ருசியான கருவாட்டு குழம்பு செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    பாட்டி, நீங்கள் ஊட்டியது "பூவா" அல்ல, பாசம்..!
  7. ஈரோடு
    மழை பெய்ய வேண்டி ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் சிறப்பு வழிபாடு
  8. நாமக்கல்
    கூட்டுறவு மேலாண்மை டிப்ளமோ பயிற்சிக்கு 29ம் தேதி முன்பதிவு துவக்கம்
  9. லைஃப்ஸ்டைல்
    ‘நீ பாதி நான் பாதி கண்ணே, அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே’
  10. லைஃப்ஸ்டைல்
    ‘எண்ணங்களை லேசாக்கினால், மன அழுத்தம் பஞ்சாய் பறந்து போகும்’