/* */

லாரி மோதி பெண் உள்பட 2 பேர் உயிரிழப்பு

Two people were killed, including a woman in a truck collision

HIGHLIGHTS

லாரி மோதி பெண் உள்பட 2 பேர்  உயிரிழப்பு
X

வேட்டவலம் பாரதிதாசன் தெருவை சேர்ந்த வீரன் என்பவர் மகளின் மஞ்சள் நீராட்டு விழா வேட்டவலத்தில் விழுப்புரம் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் அவரது உறவினர்களான விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுகா வி.புதூர் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் (50) என்பவரும் வேட்டவலம் பாரதி தெருவை சேர்ந்த கர்ணன் என்பவரின் மனைவி கலா (42) உள்பட உறவினர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிந்ததும் , கலா உறவினரான பெருமாளிடம் தன்னுடன் வீட்டுக்கு வந்து வீட் டில் உள்ளவர்களை பார்த்து விட்டு செல்லுமாறு கூறியுள்ளார். இதையடுத்து இருவரும் மண்டபத்தில் இருந்து சிறிது தூரம் நடந்து சென்றனர்.

அப்போது திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற பார்சல் சர்வீஸ் லாரி இவர்கள் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் பெருமாள், கலா இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். உடனடியாக இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக வேட்டவலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத் தில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் இருவரையும் திருவண்ணா மலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே பெருமாள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் கலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து வேட்டவலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கோவிந்தசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் பார்சல் லாரியை பறிமுதல் செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்

Updated On: 12 Jun 2022 1:37 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  2. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  3. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  6. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  7. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  8. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  10. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்