/* */

திருவண்ணாமலை பிற்படுத்தப்பட்டோர் நல விடுதியில் முதன்மை செயலாளர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் மற்றும் விடுதிகளில் முதன்மை செயலாளர் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை பிற்படுத்தப்பட்டோர் நல விடுதியில் முதன்மை செயலாளர் ஆய்வு
X

பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதியில் ஆய்வு செய்த கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஆட்சியர்.

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் அனைத்துத் துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்த மாவட்ட கண்காணிப்பு கூட்டம் நடைபெற்றது.

கலெக்டர் பா.முருகேஷ் தலைமை தாங்கினார். டிஆர்ஓ பிரியதர்ஷினி, ஆர்டிஓ மந்தாகினி, கூடுதல் கலெக்டர் வீர் பிரதாப்சிங், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் சரண்யாதேவி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், திருவண்ணாமலை மாவட்டத்திற்கான கண்காணிப்பு அலுவலரான தமிழக அரசின் முதன்மை செயலாளர் தீரஜ்குமார், மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சித்திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு நடத்தினார்.

அப்போது, வேளாண் துறை, ஊரக வளர்ச்சித்துறை, கல்வித்துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் நடப்பு நிதி ஆண்டில் நிறைவேற்றப்பட்டுள்ள பணிகளின் விவரம் குறித்து, துறைவாரியாக ஆய்வு செய்தார்.

மேலும், நடப்பு நிதி ஆண்டில் ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கீடு செய்த திட்டப்பணிகளை முழுமையாக நிறைவேற்றி முடிக்க வேண்டும், பயனாளிகள் தேர்வில் வெளிப்படையான நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்றார். மேலும், ஊரக வளர்ச்சித்துறைகளில் நிலுவையில் உள்ள திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

மேலும், வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்திருப்பதால், மாவட்டத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், மழை வெள்ள பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படும் பகுதிகளை அதிகாரிகள் முன்கூட்டியே நேரில் பார்வையிட்டு தடுப்பு பணிகளை செய்ய வேண்டும் என்றார்.

அதைத்தொடர்ந்து, திருவண்ணாமலை ஆனைக்கட்டி தெருவில் உள்ள அங்கன்வாடி மையத்தில், ஊட்டச்சத்தை உறுதி செய்வோம் எனும் திட்டத்தின் செயல்பாடுகளை நேரில் ஆய்வு செய்தார். மேலும், அண்ணா நகரில் உள்ள மாவட்ட மருந்து கிடங்கில் ஆய்வு நடத்தினார். அடி அண்ணாமலையில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தையும், மெய்யூர் கிராமத்தில் மிளகு சாகுபடியையும் அவர் ஆய்வு செய்தார். பின்னர், கீழ்பென்னாத்தூர் பகுதியில் மாணவர் விடுதிகளை அவர் பார்வையிட்டார்.

அப்போது அங்கு தங்கி படிக்கும் மாணவர்களின் அடிப்படை தேவைகள் குறித்தும், அரசின் மூலம் வழங்கப்படும் அனைத்து உதவிகளும் முறையாக வழங்கப்படுகிறதா? என்றும், மாணவர்களிடம் கேட்டறிந்தும் விடுதிகாப்பாளரிடம் அங்கு வழங்கப்படும் உணவுகள் குறித்தும் சமைத்து வைக்கப்பட்டிருந்த உணவுகள் தரமான முறையில் உள்ளதா? என பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதையடுத்து அங்குள்ள பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மூலம் செயல்பட்டு வரும் மாணவிகள் விடுதிக்கு சென்று மாணவிகளிடமும், விடுதி காப்பாளரிடமும் அடிப்படை தேவைகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.

அப்போது விடுதிக்கு சுற்றுச்சுவர் வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையினை நிறைவேற்றி தரப்படும் என்று அவர் கூறினார். மேலும் அப்போது அங்கு வழங்கப்படும் சிற்றுண்டியை சாப்பிட்ட அவர் ருசியாகவும், தரமாகவும் இருப்பதாக தெரிவித்தார். மேலும் இதே போன்று தொடர்ந்து வழங்க வேண்டுமென விடுதி காப்பாளரிடம் அறிவுறுத்தினார்.

ஆய்வின் போது துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Updated On: 26 Nov 2022 1:55 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?