/* */

செங்கம், கீழ்பெண்ணாத்தூர் பகுதிகளில் உள்ள கடைகளில் அதிகாரிகள் ஆய்வு

செங்கம், கீழ்பெண்ணாத்தூர் பகுதிகளில் உள்ள கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

HIGHLIGHTS

செங்கம், கீழ்பெண்ணாத்தூர் பகுதிகளில் உள்ள கடைகளில் அதிகாரிகள் ஆய்வு
X

கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்.

செங்கம், கீழ்பெண்ணாத்தூர் பகுதிகளில் உள்ள கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்

கீழ்பெண்ணாத்தூர் பகுதிகளில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா, நெகிழி பைகள் பயன்படுத்தப்படுகிறதா என அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்

கீழ்பெண்ணாத்தூரில் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள், புகையிலை பொருட்கள் டீ கப்புகள் பயன்படுத்தப்படுகிறதா என உதவி ஆய்வாளர், வட்டார ஆரம்ப சுகாதார மேற்பார்வையாளர் சதீஷ் பாபு தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் உதவி ஆய்வாளர், துப்புரவு ஆய்வாளா், தூய்மைப் பணியாளா்கள் நகரில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்

திருவண்ணாமலை கீழ்பெண்ணாத்தூர் சாலையில் உள்ள பேருந்து நிலையம் தாலுக்கா அலுவலகம் , பதிவுத்துறை அலுவலகம் கடைவீதிகள் உணவகம் மளிகை கடை உள்ளிட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்கள் பயன்படுத்துவது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது மேலும் கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது தொடர்ந்து நெகிழி பயன்பாடுகள் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பயன்பாடுகள் குறித்து கண்காணிக்கப்படும் என சுகாதாரத்துறை மேற்பார்வையாளர் எச்சரித்தார்.

செங்கம்

செங்கம் பேரூராட்சி நிா்வாகத்துக்கு உள்பட்ட பகுதியில் வணிகா்கள், பொதுமக்கள் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பைகள், டீ கப்புகளை பயன்படுத்தி வருவதாக வந்த புகாரின் பேரில், பேரூராட்சி செயல் அலுவலா் லோகநாதன் உத்தரவின் பேரில், உதவி ஆய்வாளா் சொக்கநாதன் தலைமையில் துப்புரவு ஆய்வாளா், தூய்மைப் பணியாளா்கள் நகரில் பல்வேறு பகுதிகளில் இருந்த கடைகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

இதில் துக்காப்பேட்டை, புதிய பேருந்து நிலையம், பெங்களூரு சாலை, பழைய பேருந்து நிலையம், கடைவீதி, இராஜ வீதி ஆகிய இடங்களில் மளிகைக் கடை, உணவகம், காய், கனி கடைகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பயன்படுத்துவது கண்டறியப்பட்டு சுமாா் 170 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், கடை உரிமையாளா்கள் ரூ.8 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது. தொடா்ந்து, நெகிழிப் பயன்பாடுகள் குறித்து கண்காணிக்கப்பட்டு பயன்படுத்தும் கடை உரிமையாளா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சி செயல் அலுவலா் எச்சரித்தாா்.

Updated On: 27 May 2023 1:49 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்