/* */

கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்

கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது

HIGHLIGHTS

கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்
X

கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது.

கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது.

துணைத்தலைவர் வாசுகிஆறுமுகம், மாவட்ட கவுன்சிலர்கள் ஆராஞ்சி ஆறுமுகம், சாந்தி முன்னிலை வகித்தனர். ஆணையாளர் அருணாசலம் வரவேற்றார்.உதவியாளர் வடிவேல் தீர்மானங்களை வாசித்தார்.

கூட்டத்தில் கவுன்சிலர்கள் சங்கர், அனுராதாசுகுமார், குப்புசாமி, கிருஷ்ணமூர்த்தி, ராஜேந்திரன், பாக்கியலட்சுமி லோகநாதன் வெண்ணிலாசங்கர் ஆகியோர், பள்ளி கட்டிடங்கள் பராமரிப்பு, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுதடைந்துள்ளதை சீரமைக்கவேண்டும்.

சாலைகளில் செடி, கொடிகள், முட்செடிகளால் சூழ்ந்துள்ளதை அகற்றுவதற்கு 100 நாள் வேலை செய்யும் பணியாளர்களை ஈடுபட செய்ய வேண்டும்.மழைக்காலத்தை கருத்தில் கொண்டு நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளைஅகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினர்.

இதற்கு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பதில் அளித்தனர்.கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பரிமளா, வட்டார கல்வி அலுவலர்கள் மோகன், ராமமூர்த்தி, மருத்துவ அலுவலர் சரவணன், பொறியாளர்கள், கவுன்சிலர்கள் உள்பட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் காந்திமதி நன்றி கூறினார்.

Updated On: 3 Sep 2022 6:24 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?