/* */

அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் விவசாய தொழிலாளர் சஙக்த்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
X

திருவண்ணாமலை அருகே விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் திருவண்ணாமலை தாலுகா குழு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தாலுகா தலைவர் முருகையன் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் உமா முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் பிரகலநாதன் கோரிக்கையை விளக்கி பேசினார்.

இதில் ஊரக வேலை திட்டத்தை சிதைக்காமல் செயல்படுத்த வேண்டும். தேர்தலில் அறிவித்த வாக்குறுதிப்படி 100 நாள் வேலை திட்டத்தை 150 வேலை நாட்களாகவும், தினக்கூலியை ரூ.381 ஆக உயர்த்தி வேண்டும். தாலிக்கு தங்கம் வழங்கும் திருமண உதவித் திட்டத்தை தொடர்ந்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர்கள் ராமதாஸ், பலராமன், விவசாய தொழிலாளர் சங்க துரிஞ்சாபுரம் ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 1 July 2022 1:19 PM GMT

Related News