/* */

காவல் உதவி செயலியை பதிவிறக்கம் செய்வது பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி

காவல் உதவி செயலியை பதிவிறக்கம் செய்வது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

HIGHLIGHTS

காவல் உதவி செயலியை பதிவிறக்கம் செய்வது பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

காவல் உதவி செயலியை பதிவிறக்கம் செய்வது குறித்து பொதுமக்களுக்கு  காவல்துறையினர் விளக்கினர்.

திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் காவல் நிலையத்தின் சார்பில் காவல் உதவி செயலியை பதிவிறக்கம் செய்வதற்கு க்யூஆர் கோர்டை ஸ்கேன் செய்ய பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று மங்கலத்தில் நடைபெற்றது.

சப்-இன்ஸ்பெக்டர் நசுரூதீன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் காவல் உதவி செயலி மூலம் போலீஸ் நிலைய இருப்பிடங்கள், வணிகர் உதவி, கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் விவரங்கள், இணைய குற்ற நிதி மோசடி புகார், பிற அவசர உதவி எண்கள், போலீஸ் சரிபார்ப்பு சேவைகள், போக்குவரத்து அபராத கட்டணம், இழந்த ஆவண அறிக்கை, சமூக ஊடகங்கள், முதல் தகவல் அறிக்கையின் நிலை, எச்சரிக்கைகள், அனைத்து இ-சேவைகள் போன்ற சேவைகள் பெறலாம் என்று பொதுமக்களுக்கு விளக்கினார்.

மேலும் காவல் உதவி செயலியை பதிவிறக்கம் செய்ய க்யூஆர் கோர்டை பயன்படுத்தலாம் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அப்போது மங்கலம் போலீஸ் நிலைய போலீசார் உடனிருந்தனர்.

Updated On: 15 July 2022 2:29 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்