மரத்தில் லாரி மோதி தீப்பிடித்தது டிரைவர் படுகாயம்

Today Accident News - கலசபாக்கம் அருகே கால்நடை தீவனம் ஏற்றி வந்த லாரி மரத்தில் மோதியதால் தீப்பிடித்தது. இந்த விபத்தில் டிரைவர் படுகாயம் அடைந்தார்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
மரத்தில் லாரி மோதி தீப்பிடித்தது டிரைவர் படுகாயம்
X

பைல் படம்.

Today Accident News - திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் இருந்து செங்கம் செல்லும் நெடுஞ்சாலையில் கால்நடை தீவனம் ஏற்றி வந்த லாரியை போளூரை அடுத்த பொத்தரை கிராமத்தை சேர்ந்த பரணிதரன் (வயது 29) என்பவர் ஓட்டி வந்தார். கலசபாக்கம் அருகே கடலாடி ஏரிக்கரையோரம் வந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய லாரி திடீரென சாலையோரம் இருந்த ஒரு புளிய மரத்தில் பயங்கரமாக மோதியது. அதில், லாரின் முன்பகுதி சேதம் அடைந்தது. மோதிய வேகத்தில் லாரியின் முன்பகுதியில் குபீரெனத் தீப்பிடித்தது.

அதில் இருந்து கரும்புகை வெளியேறியதும் அங்கிருந்த பொதுமக்கள் ஓடி வந்து, தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். மேலும் தீ, பரவாமல் இருக்க தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீயை கட்டுப்படுத்தி மேலும் பரவாமல் தடுத்தனர். பலத்த காயம் அடைந்து லாரி கேபினில் சிக்கியிருந்த டிரைவர் பரணிதரனை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தை கேள்விப்பட்டதும் போளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு குமார் மற்றும் கடலாடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விபத்துக்குள்ளான லாரியை பொக்லைன் எந்திரம் மூலம் சற்று ஓரமாக அப்புறப்படுத்தி வைத்தனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 2022-06-28T16:10:47+05:30

Related News

Latest News

 1. விளாத்திகுளம்
  விளாத்திகுளம் அருகே சூறைக்காற்று: 700க்கும் மேற்பட்ட வாழை மரங்கள்...
 2. சினிமா
  மும்பையில் வீடு வாங்கியுள்ள தமிழ் நடிகர்கள்!
 3. விழுப்புரம்
  காசநோய் குறித்து பொதுமக்களுக்கு ஆட்சியர் அறிவுரை
 4. தென்காசி
  தென்காசி மற்றும் மதுரை வழியாக காசிக்கு சிறப்பு சுற்றுலா ரயில்
 5. தென்காசி
  தென்காசி அரசு மருத்துவமனையில் இடுப்பு எலும்பு மூட்டு மாற்று அறுவை...
 6. தென்காசி
  தென்காசி மாவட்டத்தில், அணைகளின் இன்றைய நீர்மட்டம்
 7. அம்பாசமுத்திரம்
  நெல்லை மாவட்டத்தில், அணைகளின் இன்றைய நீர்மட்டம்
 8. தென்காசி
  தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
 9. திருவள்ளூர்
  பூட்டி கிடக்கும் நூலக கட்டடத்தை மீண்டும் திறக்க கிராம மக்கள்
 10. நாமக்கல்
  நாமக்கல்லில் பாரம்பரிய பயிர் ரகங்களை பிரபலப்படுத்தும் வேளாண்...