/* */

கலசப்பாக்கத்தில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் போராட்டம்

கலசப்பாக்கத்தில் மாற்றுத்திறனாளிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

கலசப்பாக்கத்தில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் போராட்டம்
X

மாற்றுத்திறனாளிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கலசப்பாக்கம் ஒன்றியத்தைச் சேர்ந்த பெண்கள் உள்பட 50 மாற்று திறனாளிகள் தங்களுக்கு 100 நாள் வேலை முறையாக வழங்க வேண்டும் எனவும், அரசு சார்பில் வழங்கப்படும் பசுமை வீடு வழங்க வேண்டும், மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மெயின் ரோட்டில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த கலசப்பாக்கம் போலீசார் மற்றும் கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் அன்பரசி ராஜசேகர், வட்டார வளர்ச்சி அலுவலர் பிரித்திங்கராஜ் ஆகியோர் நேரில் சென்று மாற்றுத் தினாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை மனுவாக அளிக்குமாறு கேட்டுக்கொண்டனர். மேலும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனை ஏற்றுக் கொண்ட மாற்று திறனாளிகள் போராட்டத்தை கைவிட்டனர்.

Updated On: 22 March 2022 6:26 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    புதிய நிதியாண்டில் முக்கிய நிதி மாற்றங்கள் என்ன தெரியுமா..?
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட கலெக்டர் உமா
  3. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து
  4. கும்மிடிப்பூண்டி
    ஊத்துக்கோட்டையில் அனுமதி பெறாமல் வாடகைக்கு செல்ல இருந்த 5 வாகனங்கள்...
  5. தென்காசி
    அதிமுகவிற்கு பொதுவுடமை நாம் தமிழர் கட்சி தலைவர் சஞ்சீவிநாதன் ஆதரவு
  6. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையம் சுகாதார நிலையம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  7. இராஜபாளையம்
    திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ராஜபாளையத்தில் தமிழக அமைச்சர் பிரச்சாரம்
  8. கோவை மாநகர்
    40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் : கோவையில் பேசிய கனிமொழி...
  9. வீடியோ
    🔴LIVE : வடசென்னை வேட்பாளர் பால்கனகராஜ் ஆதரித்து பாஜக மாநில தலைவர்...
  10. பொன்னேரி
    திருவள்ளூர் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின்