Begin typing your search above and press return to search.
ஜவ்வாது மலையில் ஆட்சியர் ஆய்வு
ஜவ்வாது மலையில் திருவண்ணாமலை ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்
HIGHLIGHTS

ஜவ்வாது மலையில் திருவண்ணாமலை ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்
திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர், ஜவ்வாது மலை பகுதிகளிலும் மாவட்ட ஆட்சியர் திரு முருகேஷ் அவர்கள் ஆய்வு பணிகளை மேற்கொண்டார். முன்னதாக ஒன்றிய குழு தலைவர் ஜீவா மூர்த்தி தலைமையில் ஆட்சியருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்குள்ள சிவன் கோவில் வளாகத்தில் மரக்கன்றுகளை ஆட்சியர் நட்டார். பின்பு தடுப்பூசி முகாம்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஜவ்வாது மலையில் அங்கிருந்த விவசாயிகளிடம் இங்கு பயிரிடப்படும் பயிர் வகைகள் பற்றியும் , அரசினால் வழங்கப்படும் உரங்கள் மற்றும் இலவச மின்சாரம் உதவித் தொகைகள் அவர்களுக்கு தடையின்றி கிடைக்கிறதா என்று கேட்டறிந்தார். பேருந்து நிலையத்தில் புதியதாக நிழற்கூடம் கட்டுவதற்கான இடத்தையும் ஆய்வு மேற்கொண்டார்.