/* */

வாலிபர் போக்சோவில் கைது உள்ளிட்ட திருவண்ணாமலை மாவட்ட கிரைம் செய்திகள்

வாலிபர் போக்சோவில் கைது உள்ளிட்ட திருவண்ணாமலை மாவட்ட கிரைம் செய்திகள் இங்கே பதிவிடப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

வாலிபர் போக்சோவில் கைது உள்ளிட்ட திருவண்ணாமலை மாவட்ட கிரைம் செய்திகள்
X

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே நீலன்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டி (வயது 27), டிரைவர். இவர் பிளஸ்-1 படிக்கும் மாணவியை கடந்த 4 மாதத்துக்கு முன்பு பள்ளிக்குச் சென்று வீடு திரும்பிய போது கடத்திச்சென்று திருமணம் செய்து கொண்டு தலைமறைவாக இருந்தார்.

இதுகுறித்து மாணவியின் தந்தை கலசபாக்கம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு கிராமத்தில் செல்லப்பாண்டி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று செல்லப்பாண்டி மற்றும் மாணவியை அழைத்து வந்தனர்.

மேலும் மாணவியை திருவண்ணாமலை அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, செல்லபாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பூட்டை உடைத்து நகை பணம் திருட்டு

திருவண்ணாமலை நல்லவன்பாளையம் பசீர் நகர் பகுதியை சேர்ந்தவர் பிச்சாண்டி, மேஸ்திரி. இவரது மனைவி வசந்தி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த 28-ந் தேதி பிச்சாண்டியின் மகளுக்கு திருமணம் நடைபெற்றது. மறுநாள் இரவு அவர் மணமக்களை அழைத்துக் கொண்டு குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு திருப்பதிக்கு சென்றார். அங்கிருந்து அவர்கள் நேற்று மாலை வீடு திரும்பினர். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் வீட்டிற்கு சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பொருட்கள் கலைந்து இருந்தது. மேலும் பீரோவின் கதவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்களுக்கும் சிதறி கீழே விழுந்து கிடந்தது.

இதனால் மேலும் அதிர்ச்சியான அவர் பீரோவை பார்த்த போது அதில் இருந்த 25 பவுன் நகைகள் மற்றும் ரூ.4 லட்சம் மர்ம நபர்களால் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்போில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடைபெற்றது. தொடர்ந்து இதுகுறித்து வசந்தி கொடுத்த புகாரின் பேரில் திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

திருமணம் தடுத்து நிறுத்தம்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டம், பெரணமல்லூா் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயதுடைய பிளஸ் 2 மாணவிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 33 வயது இளைஞருக்கும் நேற்று காலை திருமணம் நடைபெறவிருந்தது.

அதற்காக பெரணமல்லூா் பகுதியில் உள்ள ஒரு தனியாா் மண்டபத்தில் நேற்று முன்தினம் இரவு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், இரு வீட்டைச் சோந்த உறவினா்களும் பங்கேற்று இருந்தனா். இதைத் தொடா்ந்து, நேற்று காலை திருமணத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்த நிலையில், 16 வயதுடைய மாணவிக்கு திருமணம் நடைபெறுவதாக மாவட்ட சமூக நலன் (ம) மகளிா் உரிமைத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வருவாய் ஆய்வாளா் பாலகிருஷ்ணன், கிராம நிா்வாக அலுவலா் கிருஷ்ணன் மற்றும் வருவாய்த் துறையினா் அங்கு சென்று விசாரணை நடத்தி திருமணத்தை தடுத்து நிறுத்தினா்.

மேலும், இரு வீட்டாருக்கும் அறிவுரை வழங்கி எச்சரித்தனா். இதுகுறித்த புகாரின் பேரில், பெரணமல்லூா் காவல் உதவி ஆய்வாளா் ஆறுமுகம் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டாா். மேலும், பிளஸ் 2 மாணவியை மீட்டு குழந்தைகள் காப்பகத்துக்கு அனுப்பி வைத்தார்.

Updated On: 1 Nov 2022 7:02 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  4. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  6. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  7. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு
  8. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
  9. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  10. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?