/* */

சத்துணவை சாப்பிட்டு ருசி பார்த்தார் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ்

Tiruvannamalai Collector News Today - அரசு பள்ளியில் சமைக்கப்பட்ட சத்துணவை சாப்பிட்டு ருசி பார்த்தார் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ்.

HIGHLIGHTS

சத்துணவை சாப்பிட்டு ருசி பார்த்தார் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ்
X

மாணவர்களுக்கு சமைத்து வைத்திருந்த உணவை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ்.

Tiruvannamalai Collector News Today - திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம் சானானந்தல் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.16 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பில் 40 ஆயிரம் மரக்கன்றுகள் வளர்க்கப்படும் வட்டார நாற்றங்கால் பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியினை ஆட்சியர் முருகேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் அங்கு மரக்கன்றுகள் நடும் பணி மற்றும் தீவன புல் வளர்ப்பு பணியை தொடங்கி வைத்தார். இங்கு வளர்க்கப்படும் மரக்கன்றுகளை அரசு பள்ளிகளுக்கு வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் மாவட்டத்திலேயே முன்மாதிரி வட்டார நாற்றங்கால் பராமரிப்பாக (நர்சரியாக) இருக்க வேண்டும் என அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து தூய்மை பாரத இயக்கம் மூலம் இயங்கும் நெகிழி கழிவு மேலாண்மை செய்யும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த நெகிழியை பிரித்தெடுக்கும் எந்திரத்தின் செயல்பாடுகளை பார்வையிட்டார்.

பின்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு சென்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது பள்ளி வகுப்பறைகளை பார்வையிட்டு மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடி,அறிவுரைகளை வழங்கினார்.மாணவர் சேர்க்கை மற்றும் கல்வி திறன் குறித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து சத்துணவு கூடத்தை பார்வையிட்டு, அங்கு மாணவர்களுக்கு வழங்குவதற்காக சமைத்து வைத்திருந்த உணவினை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் வெற்றிவேல், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் (தணிக்கை) கருணாநிதி, ஒன்றியக்குழு தலைவர் தமயந்தி ஏழுமலை, ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) விஜயலட்சுமி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உமாமகேஸ்வரி, சானானந்தல் ஊராட்சி மன்ற தலைவர் புவனேஸ்வரி, பள்ளி தலைமையாசிரியர் அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 24 Jun 2022 11:29 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் பாதுகாப்பு பணியில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர்
  2. இந்தியா
    வாக்காளர்களுக்கு விவிபாட் சீட்டு தருவது ஆபத்து: உச்சநீதிமன்றத்தில் ...
  3. அரசியல்
    அண்ணாமலை எனக்கு பெரும் சொத்து: பிரதமர் மோடி கடிதம்
  4. ஈரோடு
    நாளை வாக்குப்பதிவு: ஈரோடு மாவட்ட எல்லையில் தீவிர வாகன சோதனை
  5. லைஃப்ஸ்டைல்
    யானைக்கு ஏன் திடீரென மதம் பிடிக்கிறது? - காரணங்களை தெரிஞ்சுக்குங்க!
  6. லைஃப்ஸ்டைல்
    இடுப்பில் அரைஞான் கயிறு கட்டுவதற்கான காரணங்கள் என்னவென்று தெரியுமா?
  7. திருப்பரங்குன்றம்
    மயங்கிய மனைவியைக் கொன்று விட்டதாக நினைத்து ஒருவர் தற்கொலை!
  8. கும்மிடிப்பூண்டி
    லாரியில் கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல்
  9. லைஃப்ஸ்டைல்
    தூங்கி எழுந்ததும் சிலருக்கு முகத்தில் வீக்கம் - நோயின் அறிகுறியா?
  10. குமாரபாளையம்
    தேர்தல் நடைமுறையால், வழக்கறிஞர்கள் சங்க ஆர்பாட்டம் ஒத்தி வைப்பு!