விபத்தில் இறந்த பெண்ணின் உடலை சாலையில் வைத்து உறவினர்கள் மறியல்

கலசபாக்கம் அருகே நிவாரண உதவி கேட்டு விபத்தில் இறந்த பெண்ணின் உடலை சாலையில் வைத்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
விபத்தில் இறந்த பெண்ணின் உடலை சாலையில் வைத்து உறவினர்கள் மறியல்
X

சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்.

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த கேட்டவரம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மனைவி சாந்தி (வயது 58). இவர் நேற்று வீட்டில் இருந்து ஆதமங்கலம் புதூர் செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்புறமாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து கடலாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று மாலை அவரது உடல் பிரேத பரிசோதனை செய்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு கொண்டு வந்தனர். அப்போது திடீரென சாந்தியின் உடலை சாலையில் வைத்து விபத்தில் இறந்த சாந்தி குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கடலாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவருக்கு நிவாரணம் உதவி வழங்க முடியாது. இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

அதன் பிறகு சாலை மறியலை கைவிட்டு களைந்து சென்றனர்.

Updated On: 20 Jan 2023 1:32 AM GMT

Related News

Latest News

 1. விளையாட்டு
  கிரிக்கெட் கடைசி 1 நாள் போட்டியில் இந்தியா தோல்வி: தொடரை வென்றது...
 2. தஞ்சாவூர்
  உலக தண்ணீர் நாள் சிறப்பு கிராம சபைக்கூட்டம்: தஞ்சை மாவட்ட ஆட்சியர்...
 3. தமிழ்நாடு
  காஞ்சிபுரம் வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம்...
 4. திருச்சிராப்பள்ளி மாநகர்
  உலக தண்ணீர் தினத்தையொட்டி திருச்சியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
 5. லைஃப்ஸ்டைல்
  குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தரும் சத்து மாவு: காய்கறி, பழங்களில்...
 6. புதுக்கோட்டை
  உலக தண்ணீர் நாளை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக்கூட்டம்
 7. தேனி
  தமிழ் மொழி ஆர்வலர்கள் கவனிப்பார்களா?. இணையத்தில் பின்தங்கிய தமிழ்...
 8. சேலம் மாநகர்
  தெலுங்கு வருட பிறப்பையொட்டி மாதேஸ்வரன் மலையில் தேரோட்ட நிகழ்ச்சி ...
 9. மேலூர்
  மணல் கடத்தல் வழக்கை துறை ரீதியாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
 10. குமாரபாளையம்
  தட்டான்குட்டை குப்பாண்டபாளையம் ஊராட்சி கிராமசபா கூட்டம்