குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையின் போது இளம்பெண் உயிரிழப்பு: உறவினர்கள் சாலை மறியல்

குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த போது இளம்பெண் திடீரென இறந்தார். உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையின் போது இளம்பெண் உயிரிழப்பு: உறவினர்கள் சாலை மறியல்
X

குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த போது இளம்பெண் திடீர் சாவு உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். 

திருப்பத்தூர் மாவட்டம் புதூர்நாடு பழைய பாளையம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ், கூலி தொழிலாளி. அவரது மனைவி மீனா (வயது 22). இவரது தாய் வீடு திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் தாலுகா கீழ்பழங்கோட்டை கிராமத்தில் உள்ளது. இவர்களுக்கு 2 வயதில் சபிசாந்த் என்ற மகன் உள்ளான்.

2-வது முறையாக கர்ப்பமான மீனா கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரசவத்திற்காக ஜமுனாமரத்தூரில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு வந்து உள்ளார். அவருக்கு கடந்த 2 மாதத்திற்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் நேற்று காலை ஜமுனாமரத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக மீனா அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மீனா இறந்து விட்டார்.

இது குறித்து தகவலறிந்த மீனாவின் உறவினர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் தான் உயிரிழந்தார் என்று குற்றம் சாட்டினர். இதனால் ஆத்திரம் அடைந்த மீனாவின் உறவினர்கள் நேற்று இரவு ஜமுனாமரத்தூர் ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த ஜமுனாமரத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 23 April 2022 1:06 AM GMT

Related News