/* */

கலசபாக்கத்தில் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி முகாம்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி முகாம் நடைபெற்றது

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டம் மேல்மலையனூர் ஊராட்சிக்கு உட்பட்ட மேல் வன்னியனூர், கீழ் வன்னியனூர் , கர்ணாம்பாடி நவந்தபாளையம் ஆகிய பகுதியில் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி முகாம் நடைபெற்றது. கலசப்பாக்கம் கால்நடை மருத்துவமனை உதவி மருத்துவர் (பொறுப்பு) வித்யாசாகர் தலைமையில் கோமாரி தடுப்பூசி போடப்பட்டது.

தடுப்பூசி குறித்து பொதுமக்களுக்கு கூறும்போது, கால்நடைகளில் கோமாரி நோய் வராமல் தடுக்கும் வகையில் இலவச கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி ஆண்டுக்கு இரு முறை மேற் கொள்ளப்பட்டு வருகிறது. எனவே விவசாயிகள் தங்களுடைய கால்நடைகளுக்கு இந்த தடுப்பூசியை செலுத்திக் கொள்வதன் மூலம் உயிரிழப்பை தடுக்க முடியும். மேலும் தடுப்பூசி செலுத்தாத மாடுகளுக்கு கோமாரி நோய் வந்த பின் கால்நடை மருத்துவரிடம் சிகிச்சையை எடுத்துக் கொள்வதன்மூலம் விரைவில் குணப்படுத்த முடியும். அதேபோல் கிருமி நாசினி கொண்டு கொட்டகையை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் கோமாரி பாதித்த கால்நடைகளை அப்புறப்படுத்தி மருத்துவரிடம் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.என்று கூறினார்.

இம்முகாமில் சுமார் 250 மேற்பட்ட கால்நடைகள் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.

மேலும் இம்முகாமில் கலசப்பாக்கம் கால்நடை மருத்துவமனை உதவியாளர் சௌந்தர் , மேலராணி கால்நடை மருந்தக உதவியாளர் லக்ஷ்மி ,மேல் வண்ணியனூர் பால் உற்பத்தியாளர் சங்க செயலாளர் குபேந்திரன் மற்றும் செயற்கை முறை கருவூட்டாலர்கள் பங்கேற்றனர்.

Updated On: 10 Nov 2021 11:17 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்ப குதூகலத்தின் புன்னகைப்பூக்கள், உறவுகள்..!
  2. ஆன்மீகம்
    நெற்றிக்கண்ணால் ஞானம் அளந்தவன், சிவன்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் வீட்டில் ஒரு கொலைகாரன்.. அன்றாட பொருட்களே ஆபத்தான ஆயுதங்கள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கண்ணெதிரே வாழும் கடவுள், 'அப்பா'..!
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 11 மணி நிலவரப்படி 26% வாக்குகள்...
  6. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் விறுவிறுப்பு: 2 மணி நேரத்தில் 12.88 சதவீதம்...
  7. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  8. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  9. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  10. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!