/* */

100 நாள் வேலைக்கு அட்டை வழங்காததை கண்டித்து சாலை மறியல்

கலசபாக்கம் அருகே 100 நாள் வேலைக்கு அட்டை வழங்காததை கண்டித்து நடைபெற்ற சாலை மறியலில் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டது.

HIGHLIGHTS

100 நாள் வேலைக்கு அட்டை வழங்காததை கண்டித்து சாலை மறியல்
X

கலசபாக்கம் அருகே சாலைமறியல் போராட்டத்தின்போது அரசு பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டது

கலசபாக்கத்தை அடுத்த மேல்வன்னியனூர் கிராமத்தில் வீட்டுவரி, குழாய்வரி செலுத்தாதவர்களுக்கு 100 நாள் வேலைக்கான அட்டையை பதிவு செய்யாமல் மறுக்கப்படுவதாக கூறி அப்பகுதி மக்கள் திடீரென மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த அரசு பேருந்தை மறித்து முன்பக்க கண்ணாடியை உடைத்து உள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கலசபாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 7 April 2022 7:07 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    தத்துவம் பேசும் வித்தகன் ஆகலாமா..?
  2. இந்தியா
    துப்பாக்கியுடன் கிராமத்தில் புகுந்து தேர்தலை புறக்கணிக்க கூறிய...
  3. லைஃப்ஸ்டைல்
    காதல், சர்வதேச பொதுமொழி..! ஆயினும் அது புதுமொழி..!
  4. லைஃப்ஸ்டைல்
    துக்கம் என்று வந்துவிட்டால், அக்கா வந்து முதலில் நிற்பாள்..!
  5. ஈரோடு
    ஈரோடு திமுக வேட்பாளர், தமிழக முதல்வர் சந்திப்பு!
  6. லைஃப்ஸ்டைல்
    பெண்களின் அழகுக்கு அழகு சேர்க்கும் பாரம்பரிய ஆபரணங்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    முகம் பிரகாசமாக மின்னுவதற்கான இயற்கை வழிகள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  8. நாமக்கல்
    கோடைக்காலத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள்: 30ம் தேதி இலவச...
  9. நாமக்கல்
    வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் அன்று சம்பளத்துடன் விடுமுறை ..!
  10. லைஃப்ஸ்டைல்
    ருசியான கருவாட்டு குழம்பு செய்வது எப்படி?