Begin typing your search above and press return to search.
மஞ்சுவிரட்டுக்கு தடை விதிப்பது குறித்து கோட்டாட்சியர் ஆலோசனை
கலசப்பாக்கம் பகுதியில் மஞ்சுவிரட்டு நடத்த தடை விதிப்பது குறித்து கோட்டாட்சியர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது
HIGHLIGHTS

மஞ்சுவிரட்டுக்கு தடை விதிப்பது குறித்து கோட்டாட்சியர் கவிதா தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் பகுதியில் மஞ்சுவிரட்டு நடத்த தடை விதிப்பது குறித்து வருவாய் கோட்டாட்சியர் கவிதா தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
ஆலோசனைக் கூட்டத்தில் கோட்டாட்சியர் கவிதா கூறுகையில், ஆரணி சரகத்தில் அனுமதியின்றி காளை விடும் விழா நடத்தப்பட்டுள்ளது. இதில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் இதனால் காளை விடும் விழா, மஞ்சுவிரட்டு போன்ற நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது, தற்போது அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது, மேலும் நீதிமன்ற உத்திரவு பெற்று தான் நடத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் போளூர் டிஎஸ்பி அறிவழகன், காவல் ஆய்வாளர்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள், விழா குழுவினர் பங்கேற்றனர்.