/* */

செலவுக்கு பணம் தராத ஆத்திரம்; தாய் மீது அம்மிக்கல்லை போட்டு கொன்ற மகன்

செலவுக்கு பணம் தர மறுத்ததால், அம்மிக்கல்லைப்போட்டு தாயை கொன்ற மகன் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

செலவுக்கு பணம் தராத ஆத்திரம்;  தாய் மீது அம்மிக்கல்லை போட்டு கொன்ற மகன்
X

திருவண்ணாமலை மாவட்ட குற்றச் சம்பவங்களின் தொகுப்பு (கோப்பு படம்)

திருவண்ணாமலை மாவட்ட க்ரைம் செய்திகள்

தலையில் அம்மிக்கல்லைப் போட்டு, பெற்ற தாயை கொன்ற மகன்

சேத்துப்பட்டு அடுத்த மேல பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மனைவி வசந்தா(61). இவர்களுக்கு முருகன்(41), பால விநாயகம்(31) என 2 மகன்கள் உள்ளனர். இவர்களில் விநாயகம் மனநிலை பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. செலவுக்கு பணம் கேட்டு, அவர் தாயார் வசந்தாவிடம் அடிக்கடி தகராறு செய்துள்ளார்.

நேற்று மது குடிக்க பணம் தருமாறு விநாயகம் கேட்டுள்ளார். வசந்தா தர மறுத்துள்ளார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த விநாயகம், அம்மிக்கல்லை எடுத்து பெற்ற தாயென்றும் பார்க்காமல் அவர் மீது போட்டுள்ளார். பலத்த காயமடைந்த வசந்தாவை அந்த பகுதியில் இருந்தவர்கள் வேலூர்அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் அவர் சிகிச்சை பலனின்றி இன்று இறந்து விட்டார்.

இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே விநாயகம் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கலசப்பாக்கம் அருகே காா் - லாரி மோதல்: 2 போ பலி

கலசப்பாக்கம் அருகே நள்ளிரவு காரும், லாரியும் மோதிக்கொண்டதில் இருவா் உயிரிழந்தனா்.

கலசப்பாக்கத்தைச் சோந்த நடேசன் மகன் பாபு (எ) ரவிக்குமாா் (45), ராமசாமி மகன் வீரமணி (50), மருத்துவாம்பாடி கிராமத்தைச் சோந்த மூா்த்தி மகன் ஏழுமலை (29) ஆகியோா் திருவண்ணாமலையில் நடைபெற்ற உறவினா் திருமணத்துக்கு வியாழக்கிழமை மாலை காரில் சென்றனா். பின்னா், மூவரும் நள்ளிரவில் காரில் திருவண்ணாமலையில் இருந்து கலசப்பாக்கத்துக்கு திரும்பிக்கொண்டிருந்தனா்.

வேலூா் - திருவண்ணாமலை சாலையில் தென்பள்ளிப்பட்டு கிராமத்தின் அருகே இவா்களது காா் வந்தபோது, அதே சாலையில் ஆரணியிலிருந்து திருவண்ணாமலை நோக்கிச் சென்ற லாரி மோதியது. இந்த விபத்தில் காரில் வந்த பாபு (எ) ரவிக்குமாா் அந்த இடத்திலேயே உயிரிழந்தாா். வீரமணி, ஏழுமலை ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.

பின்னா், இருவரும் மீட்கப்பட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சோக்கப்பட்டனா். இருப்பினும், அங்கு ஏழுமலை இன்று உயிரிழந்தாா். வீரமணி தீவிர சிகிச்சைக்காக வேலூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து கலசப்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Updated On: 4 March 2023 11:53 AM GMT

Related News