திருவண்ணாமலை அருகே பாஞ்சாலியம்மன் கோயிலில் கோபுர கலசங்கள் திருட்டு

திருவண்ணாமலை அருகே பாஞ்சாலியம்மன் கோயிலில் கோபுர கலசங்கள் திருட்டு போனது

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
திருவண்ணாமலை அருகே பாஞ்சாலியம்மன் கோயிலில் கோபுர கலசங்கள் திருட்டு
X

கோபுர கலசங்கள் திருடப்பட்ட பாஞ்சாலி அம்மன் கோயில்.

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே அழகு சேனை கிராமத்தில் பாஞ்சாலி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் கருவறை மீது பெரிய கலசம், கொடி மரத்தின் மீது மூன்று கலசங்கள் மகா மண்டபத்தின் முன்புறத்தில் மூன்று கலசங்கள் சிறிய மஞ்சியம்மன் கோயிலில் மூன்று கலசங்கள் என பத்து கலசங்கள் பொருத்தப்பட்டிருந்தன. இவை அனைத்தும் ஐம்பொன்னாலானவை.

இந்நிலையில் இக்கோயிலில் கருவறை மீது உள்ள கலசத்தை தவிர மற்ற ஒன்பது கலசங்களையும் மர்ம நபர்கள் இரவு திருடி சென்றுள்ளனர். இது குறித்து கோயில் நிர்வாகியும் ஓய்வு பெற்ற உதவி ஆட்சியருமான மூர்த்தி மற்றும் விழா குழுவினர் கண்ணமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்

இதையடுத்து கண்ணமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் விஜயகுமார் தலைமையில் போலீசார் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 22 Aug 2022 10:51 AM GMT

Related News