காசோலையில் போலிக் கையெழுத்திட்டு பணம் மோசடி: இளைஞர் கைது

ஜமுனாமரத்தூரில் காசோலையில் போலியாக கையெழுத்திட்டு ரூ.12 லட்சம் மோசடி செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
காசோலையில் போலிக் கையெழுத்திட்டு பணம் மோசடி: இளைஞர் கைது
X

பைல் படம்.

திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூர் தாலுகா கோமுட்டி ஏரி பகுதியை சேர்ந்தவர் செல்வம். அவரது மனைவி சாந்தி (வயது 40). இவர், கடந்த 2 ஆண்டுகளாக ஜவ்வாதுமலை பெண்கள் தொழில் முனைவோர் கூட்டமைப்பின் தலைவியாக உள்ளார். இந்த கூட்டமைப்பில் ஜமுனாமரத்தூரை சுற்றியுள்ள மலை கிராமங்களை சேர்ந்த 12 மகளிர் குழுக்கள் செயல்பட்டு வருகின்றது.

இதில் ஜமுனாமரத்தூரில் உள்ள ஜம்படி கிராமத்தை சேர்ந்த பிரவீன்குமார் (32) என்பவர் கள அலுவலராக இருந்தார். இந்த கூட்டமைப்பிற்கான சேமிப்பு கணக்கு ஜமுனாமரத்தூரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் உள்ளது. வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க குழுவின் தலைவியான சாந்தி, பொருளாளரான தீபா, முதன்மை நிர்வாகியான அருள்பத்திநாதன் ஆகியோர் குழு கூட்டமைப்பால் அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.

இந்த கூட்டமைப்பில் 12 மகளிர் குழுக்களில் உள்ள உறுப்பினர்கள் விவசாய பொருட்களை வாங்குவது சம்பந்தமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதற்குரிய பணத்திற்கு காசோலையில் அவர்கள் 3 பேரும் கையெழுத்திட்டு அதை கள அலுவலர் பிரவீன்குமாரிடம் கொடுத்து அனுப்புவர்.

இந்த நிலையில் பிரவீன்குமார் கூட்டமைப்பின் வங்கி காசோலையில் தலைவி உள்ளிட்ட நிர்வாகிகளின் கையெழுத்தை போட்டு அதன் மூலம் வங்கி கணக்கில் இருந்து ரூ.12 லட்சம் எடுத்து மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கூட்டமைப்பின் தலைவி சாந்தி திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி போலியாக காசோலையில் கையெழுத்திட்டு ரூ.12 லட்சம் மோசடியில் ஈடுபட்ட பிரவீன்குமாரை கைது செய்தனர்.

Updated On: 13 March 2023 9:47 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    தமிழ் மொழி ஆர்வலர்கள் கவனிப்பார்களா?. இணையத்தில் பின்தங்கிய தமிழ்...
  2. சேலம் மாநகர்
    தெலுங்கு வருட பிறப்பையொட்டி மாதேஸ்வரன் மலையில் தேரோட்ட நிகழ்ச்சி ...
  3. மேலூர்
    மணல் கடத்தல் வழக்கை துறை ரீதியாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
  4. குமாரபாளையம்
    தட்டான்குட்டை குப்பாண்டபாளையம் ஊராட்சி கிராமசபா கூட்டம்
  5. திருச்சிராப்பள்ளி மாநகர்
    பெண் போலீசாரின் சைக்கிள் பேரணிக்கு திருச்சியில் வரவேற்பு
  6. கல்வி
    JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் முன்னாள் மாணவர்...
  7. சோழவந்தான்
    மதுரை அருகே திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் கலாசார பயிலரங்கம்
  8. உலகம்
    ஆப்பிரிக்க கண்டம் இரண்டாக பிளக்க போகிறது: இது உலகின் அதிசய நிகழ்வு
  9. கோவில்பட்டி
    கோவில்பட்டி அருகே கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் திடீர் போராட்டம்
  10. திருச்செந்தூர்
    மக்களின் நம்பிக்கை காப்பாற்றப்படும்.. தூத்துக்குடி ஆட்சியர் பேச்சு…