Begin typing your search above and press return to search.
கலசபாக்கத்தில் மக்களை தேடி மருத்துவ முகாம்
கலசப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அருணை மருத்துவக் கல்லூரி சார்பில் மக்களை தேடி மருத்துவ முகாம் நடைபெற்றது.
HIGHLIGHTS

மக்களை தேடி மருத்துவ முகாமை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தொடங்கி வைத்தார்
அருணை மருத்துவக் கல்லூரி சார்பில் நடைபெற்ற மக்களை தேடி மருத்துவ முகாமை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை கூடுதல் ஆட்சியர் பிரதாப், ஒன்றிய குழுத்தலைவர் அன்பரசி , மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜெயக்குமார் மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
இம்முகாமில் கண், காது, மூக்கு, தொண்டை, எலும்பு என பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.