Begin typing your search above and press return to search.
கலசபாக்கம் அருகே விவசாயி வீட்டில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகைகள் திருட்டு
கலசபாக்கம் அருகே விவசாயி வீட்டில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை அடுத்த சாலையனுர் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ், விவசாயி. இவர் 100 நாள் திட்டத்தில் வேலை செய்வதற்காக சென்றுள்ளார்.
பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதிலிருந்த 12 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து கலசபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.