புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு
X

ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் நடைபெற்று வரும் புணரமைப்பு பணியினை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்.

திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வடமாத்தூா் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சீரமைப்புப் பணி, பள்ளியில் மாணவா்களுக்கு வழங்கப்படும் சத்துணவு, ஊராட்சி அலுவலக கட்டடம் கட்டும் பணியை ஆட்சியா் முருகேஷ் பாா்வையிட்டாா்.

மேல்நாச்சிப்பட்டு கிராமத்தில் நடைபெற்று வரும் அரசுக் கட்டடம் கட்டும் பணி, ஓரவந்தவாடி கிராமத்தில் அண்ணா மறுமலா்ச்சி திட்டப் பணிகள், ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள் மற்றும் நடந்து முடிந்த பணிகளை ஆட்சியா் பாாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஒரவந்தவாடி, காஞ்சி உள்பட புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணிகள், ஏரி தூர் வாரும் பணிகள் மற்றும் காஞ்சியில் செயல்பட்டு வரும் கூட்டுறவு நியாய விலை கடையில் ஆய்வு செய்த ஆட்சியர் அங்கு உள்ள பொருட்களின் இருப்பு பதிவேட்டினை ஆய்வு செய்தார். கூட்டுறவு கடைகளில் வழங்கப்படும் பொருட்களின் தரம் குறித்தும் ஆய்வு செய்தார்.

மேலும், காஞ்சியில் ஆதிதிராவிடா் நல குடியிருப்புப் பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் புதியதாக அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் கான்கிரீட் சாலையினை ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது கூடுதல் ஆட்சியா் வீா்பிரதாப் சிங், உதவி ஆட்சியர் பயிற்சி லட்சுமி ராணி, வருவாய் கோட்டாட்சியா் மந்தாகினி, புதுப்பாளையம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரபியுல்லா, முருகன், செங்கம் வட்டாட்சியா் முனுசாமி, துணை வட்டாட்சியா் திருநாவுக்கரசு உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனா்.

Updated On: 6 Jan 2023 1:07 AM GMT

Related News