Begin typing your search above and press return to search.
ஜமுனாமரத்தூர் கோலப்பன் ஏரியில் பேரிடர் கால விழிப்புணர்வு ஒத்திகை
ஜமுனாமரத்தூர் கோலப்பன் ஏரியில் பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிகை நடவடிக்கையாக பேரிடர் மீட்பு விழிப்புணர்வு ஒத்திகை நடைபெற்றது.
HIGHLIGHTS

கோலப்பன் ஏரியில் நடந்த பேரிடர் மீட்பு விழிப்புணர்வு ஒத்திகை.
திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலையில் வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் கால ஒத்திகை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கோலப்பன் ஏரியில் நடந்த விழிப்புணர்வு ஒத்திகையில், ஜமுனாமரத்தூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து பொதுமக்களுக்கு செய்துகாட்டினர்.
இந்நிகழ்ச்சிக்கு தாசில்தார் ரமேஷ் தலைமை தாங்கினார். துணைத் தாசில்தார் திருவேங்கடம், தீயணைப்பு வீரர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர் .