Begin typing your search above and press return to search.
ரேஷன் கடைகளில் தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவர் ஆய்வு
ஜமுனாமரத்தூர் பகுதிகளில் ரேஷன் கடைகளில் தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி இன்று ஆய்வு மேற்கொண்டார்
HIGHLIGHTS

ரேஷன் கடைகளில் ஆய்வு மேற்கொண்ட துணை சபாநாயகர் பிச்சாண்டி
ஜமுனாமரத்தூர் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளில் தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது ரேஷன் கடையில் போதிய உணவு பொருட்கள் இருப்பு உள்ளதா, குடும்ப அட்டைதாரர்களுக்கு முறையாக உணவு பொருட்கள் வழங்கப்படுகிறதா என கடைகளில் வைக்கப்பட்டுள் ஆவணங்களை ஆய்வு செய்தார்.
அப்போது அங்கிருந்த பொதுமக்களிடம் ரேஷன் பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா, பொருட்களில் குறைபாடுகள் உள்ளனவா என கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட விநியோக அலுவலர், கூட்டுறவு நியாய விலை கடை நிர்வாக இயக்குனர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.