விதிமீறி காளை விடும் விழா நடத்திய 100-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு

கலசப்பாக்கம் அருகே, கொரோனா கட்டுப்பாட்டை மீறி காளை விடும் விழா நடத்திய 100-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதியப்பட்டது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
விதிமீறி காளை விடும் விழா நடத்திய 100-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு
X

விதிமீறி நடைபெற்ற காளை விடும் விழா 

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் தாலுகாவிற்கு உட்பட்ட வீரளூர், மேல்சோழங்குப்பம், கடலாடி, கீழ்பாலூர் ஆகிய 4 கிராமங்களில் காளை விடும் விழா நடந்தது. கொரோனா வைரஸ் தொற்று காரணத்தால் மக்கள் கூடும் இடங்களை தவிர்க்க வேண்டும் என்பதால் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தடையை மீறி போலீசாரின் அனுமதி பெறாமல் காளை விடும் விழா நடத்திய 4 கிராமத்தில் உள்ள விழா குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கால்நடைத்துறை டாக்டர் வித்யாசாகர் கடலாடி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் 100-க்கும் மேற்பட்டோர் மீது கடலாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 14 Jan 2022 5:47 AM GMT

Related News