/* */

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: பெண் தாசில்தார் குற்றவாளி உயர்நீதிமன்றம் தீர்ப்பு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பெண் தாசில்தார் குற்றவாளி என அறிவித்து தண்டனை விவரங்கள் ஆக.5ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளன

HIGHLIGHTS

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: பெண் தாசில்தார் குற்றவாளி  உயர்நீதிமன்றம் தீர்ப்பு
X

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பெண் தாசில்தார் குற்றவாளி என அறிவித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் பெண் தாசில்தாருக்கு விதிக்கப்படும் தண்டனை விவரங்கள் ஆக.5ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளன.

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாலுகாவில் உள்ள கடலடி என்ற கிராமத்தில் உள்ள பொதுபாதை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று முருகன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் 2017ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்தார்.இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், 12 வாரங்களில் மனுவை பரீசிலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. எனினும் இந்த வழக்கில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்து வந்த இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி தலைமையிலான அமர்வில் கடந்த ஜூன் மாதம் விசாரணைக்கு வந்த போது, நான்கு வாரங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.இந்த நிலையில் முருகன் மீண்டும் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

நீதிபதி முனீஷ்வர் பண்டாரி மற்றும் நீதிபதி பரத் சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, நீதிமன்ற உத்தரவு 4 ஆண்டுகளுக்கு மேலாக அமல்படுத்தப்படாமல் இருப்பது என்பது நீதிமன்ற அவமதிப்பு செயல் என்று தெரிவித்த நீதிபதிகள், உத்தரவை வேண்டுமென்றே அமல்படுத்தாத சம்பந்தப்பட்ட தாசில்தாருக்கு சிறை தண்டனை விதிக்க போவதாக அறிவித்தார்.

அப்போது இரண்டு நாட்களில் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், கலசப்பாக்கம் தாலுகாவின் அப்போதைய பெண் தாசில்தார் லலிதா நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவித்து தீர்ப்பளித்த நீதிபதிகள், தண்டனை விbரத்தை அறிவிப்பதற்காக அவரை ஆகஸ்ட் 5 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

மேலும் உயர் நீதிமன்றத்தில் 2018 ஆம் ஆண்டு முதல் ஏராளமான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி, இது ஆரம்பம் தான் எனவும் எச்சரித்தார்.

Updated On: 3 Aug 2022 1:33 PM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?