Begin typing your search above and press return to search.
தென்னை நார் மற்றும் சார்பு தொழில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
கயிறு வாரியம் சார்பில், தென்னை நார் மற்றும் சார்பு தொழில் விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கத்தில் நடைபெற்றது.
HIGHLIGHTS

ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கத்தில் கயிறு வாரியம் நடத்தும் தென்னை நார் மற்றும் சார்பு தொழில் விழுப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கத்தில் கயிறு வாரியம் நடத்தும் தென்னை நார் மற்றும் சார்பு தொழில் விழுப்புணர்வு நிகழ்ச்சி, நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் சேர்மேன் ஜவ்வாதுமலை ஒன்றியத்தை சேர்ந்த ஜீவாமூர்த்தி தலைமை வகித்தார்.
பழங்குடியினர் மேம்பாடு குறித்து விரிவுரையாளர்கள் மாரியம்மாள், பா.அன்பழகன் பேசினர். சிறப்பு விருந்தினர்களாக சக்திவேல், பிரகாஷ், இந்தியன் வங்கி மேலாளர் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் தென்னை நார் பொருட்கள் என்னென்ன உற்பத்தி செய்யலாம் என்பதை காண்பித்தார்கள் . இதில் பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.