திருவண்ணாமலை அருகே கிராம மக்களுடன் பா.ஜ.க.வினர் பொங்கல் கொண்டாட்டம்

திருவண்ணாமலை அருகே கிராம மக்களுடன் பா.ஜ.க.வினர் பொங்கல் கொண்டாடினர்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
திருவண்ணாமலை அருகே கிராம மக்களுடன் பா.ஜ.க.வினர் பொங்கல் கொண்டாட்டம்
X

மலப்பம்பாடி கிராமத்தில் பா.ஜ.க.சார்பில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.

தமிழர் திருநாள் என்று போற்றப்படும் பொங்கல் பண்டிகையை பா.ஜ.க.வினர் மேலிட உத்தரவின்பேரில் கிராமங்கள் தோறும் கொண்டாடி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்திலும் கடந்த 2 நாட்களாக பா.ஜ.க. நிர்வாகிகள் கிராமங்கள்தோறும் சென்று கட்சி கொடியேற்றி பொங்கல் விழாவை கொண்டாடி வருகின்றனர்.

திருவண்ணாமலையை அடுத்த மலப்பம்பாடி கிராமத்தில் பா.ஜ.க.சார்பில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி கிராமத்தில் பா.ஜ.க. கொடி ஏற்றி இனிப்பு வழங்கினர்.

அதன் பின்னர் பெண்கள் கிராமத்தில் அழகிய வண்ண கோலமிட்டு புதுப்பானையில் சர்க்கரை பொங்கலிட்டு அனைவருக்கும் கொடுத்து மகிழ்ந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பாஜக தெற்கு மாவட்ட தலைவர் ஜீவானந்தம், மாநில பொதுக்குழு உறுப்பினர் கர்ணன், வடக்கு ஒன்றிய தலைவர் எம். சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் மாவட்ட மகளிர் அணி பொருளாளர் வி.மாலதி கலந்துகொண்டு தனது சொந்த செலவில் 50 பெண்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கினார். முன்னதாக கிளைத் தலைவர் ராமு வரவேற்றுப் பேசினார். முடிவில் தொழில்நுட்பப் பிரிவு உறுப்பினர் ஏழுமலை நன்றி கூறினார்.

Updated On: 14 Jan 2022 6:29 AM GMT

Related News

Latest News

  1. சிதம்பரம்
    அரசு மருத்துவ கல்லூரி பயிற்சி மருத்துவர்கள் 5-வது நாளாக போராட்டம்
  2. குறிஞ்சிப்பாடி
    குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம்
  3. கடலூர்
    கடலூர் அருகே கால்நடை மருந்தகத்தை அமைச்சர் துவக்கி வைத்தார்
  4. குளச்சல்
    குமரியில் மீனச்சல் ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோவிலில் பொங்கல் விழா
  5. காஞ்சிபுரம்
    தாமல் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு அனுமதி கோரி கிராம மக்கள் மனு
  6. கன்னியாகுமரி
    ஊரடங்கு கட்டுப்பாடுகளால் பொங்கல் விடுமுறை நாளில் களையிழந்த...
  7. இராஜபாளையம்
    இராஜபாளையம் அருகே வறுமையில் வாடிய தாய், மகன், மகளுக்கு கலெக்டர் உதவி
  8. நாகப்பட்டினம்
    நாகையில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது
  9. கரூர்
    கரூர் மாவட்ட அதிமுக சார்பில் எம்ஜிஆர் 105 வது பிறந்தநாள் விழா
  10. திருத்துறைப்பூண்டி
    திருத்துறைப்பூண்டியில் களையிழந்த அந்தோணியார் பொங்கல் திருவிழா