நீரில் மூழ்கி இறந்த குழந்தைகளின் குடும்பத்திற்கு அமைச்சர் நிவாரண நிதி
திருவண்ணாமலை அருகே ஏரியில் மூழ்கி இறந்த மூன்று குழந்தைகளின் குடும்பத்தினருக்கு அமைச்சர் எ.வ.வேலு நிவாரண நிதி வழங்கினார்.
HIGHLIGHTS

நீரில் மூழ்கி இறந்த குழந்தைகளின் குடும்பத்திற்கு நிவாரண நிதியை அமைச்சர் எ.வ வேலு வழங்கி ஆறுதல் கூறினார்
திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை வட்டம். சு, கம்பம்பட்டு கிராமத்ததை சேர்ந்த மாபுகான் என்பவரின் மகள்கள் நஸ்ரின் (வயது 14). நசீமா (வயது 14) மற்றும் ஷாகிரா (வயது 12) ஆகியோர் சு கம்பம்பட்டு ஏரிநீரில் எதிர்பாராதவிதாமக மூழ்கி இறந்துவிட்டனர்.
மேற்படி இறந்துவிட்ட நபர்களின் தந்தை மாபுகானுக்கு மாவட்ட ஆட்சித் தலைவரின் நிதியிலிருந்து உடனடி நிவாரண நிதியாக தலா ரூ.. 50,000/-வீதம் இறந்த மூன்று மகள்களுக்கு ரூ.1,50,000/- திற்கான காசோலையினை பொதுபணித்துறை அமைச்சர் எ.வ. வேலு இன்று வழங்கி ஆறுதல் கூறினார் .
மேலும், இத்துயர நிகழ்வு குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தனிக் கவனத்திற்கு கொண்டு சென்று மேற்படி குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு மூலம் விரைவில் நிறைவேற்றிதரப்படும் எனவும் தெரிவித்தார்.
இந்தநிகழ்வின் போது சட்டமன்ற பேரவைதுணைத் தலைவர் கு, பிச்சாண்டி, ஆட்சித் தலைவர் பா. முருகேஷ், கூடுதல் ஆட்சியர் மு. பிரதாப், திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் வீ. வெற்றிவேல், அரசு அலுவலர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.