வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 2 பேர் கைது

திருவண்ணாமலை அருகே வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 2 பேர் கைது
X

வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் வனப்பகுதிகள் அதிக அளவில் உள்ளன. அங்கு மான், முயல், காட்டுப்பன்றி, குரங்குகள் உள்ளிட்ட பல வனவிலங்குகள் ஏராளமாக உள்ளன. வனவிலங்குகளை சிலர் வேட்டையாடி வருகின்றனர்.

இதனை தடுக்கும் வகையில் வனத்துறையினர் தினமும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை வன பாதுகாவலர் சுஜாதா, மாவட்ட வன அலுவலர் அருண்லால், வனச்சரக அலுவலர் சீனிவாசன் உள்ளிட்ட 15 பேர் வனப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது மல்லவாடி அருகே உள்ள சொர கொளத்தூர் காப்புக்காடு பகுதியில் சிலர் வனவிலங்குகளை வேட்டையாட முயற்சிப்பது தெரியவந்தது. அவர்களை வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர்.

இதில் 2 பேர் பிடிபட்டனர். 2 பேர் தப்பி சென்றுவிட்டனர். பிடிப்பட்டவர்கள் கொண்டம் நரிக்குறவர் காலனியை சேர்ந்த சுமன், தானலாம் பாடியை சேர்ந்த விஜய் என்று தெரிய வந்தது. அவர்களை வனத்துறையினர் கைது செய்து, அவர்கள் வைத்திருந்த ஒரு நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் வனப்பகுதிக்கு ஓட்டி வந்த இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

Updated On: 9 Jan 2022 10:47 AM GMT

Related News

Latest News

 1. காஞ்சிபுரம்
  சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்தவருக்கு ஏழாண்டு கடுங்காவல்; ரூ.5000...
 2. காஞ்சிபுரம்
  மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 345 மனுக்கள் அளிப்பு
 3. சினிமா
  ஆபத்தான நிலையில் ஈஸ்வரி... கண்டுகொள்ளாத குணசேகரன்!
 4. டாக்டர் சார்
  இடம் மாறிய கர்ப்பம் என்றால் என்ன? உங்களுக்கு
 5. காஞ்சிபுரம்
  காஞ்சிபுரத்தில் 10 ஜோடிகளுக்கு சீர் வரிசையுடன் திருமணம் நடத்தி வைத்த...
 6. உலகம்
  போர் தொடங்கிய பின் முதல் முறை: உக்ரைன் சென்றார் ரஷிய அதிபர் புடின்
 7. காஞ்சிபுரம்
  புவனகிரி அம்மன் கோயிலை அறநிலையத்துறையுடன் இணைக்க குடும்பத்துடன்...
 8. காஞ்சிபுரம்
  வாடகை செலுத்தாத கடைகளுக்கு மாநகராட்சி சீல் வைக்க முயற்சி:...
 9. தமிழ்நாடு
  யாருக்கெல்லாம் மாதம் ரூ.1000. கிடைக்கும்? கசிந்த தகவல்
 10. சினிமா
  யார் அந்த கீ? அசோக் செல்வனின் காதல் மனைவியாகும் நடிகை!