Begin typing your search above and press return to search.
முறையாக வேலை வழங்க கோரி 100 நாள் திட்ட பணியாளர்கள் மறியல்
கலசப்பாக்கம் அருகே 100 நாள் வேலை முறையாக வழங்க கோரி திடீரென பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
HIGHLIGHTS

100 நாள் வேலை முறையாக வழங்க கோரி பணியாளர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட சீட்டம்பட்டு ஊராட்சியில் 100 நாள் வேலை முறையாக வழங்காமல் வார்டு வாரியாக பிரித்து வழங்குவதால் குளறுபடி ஏற்படுவதாகும். ஏற்கனவே வழங்கிய பழைய முறைப்படியே இந்த வேலை இத்திட்டத்தை வழங்க வேண்டுமென அப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீரென சீட்டம்பட்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த கலசபாக்கம் போலீசார் நேரில் சென்று சமரசம் செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பிறகு சாலை மறியல் கைவிடப்பட்டது.