செய்யாறு ஒன்றியத்தில் கிராம சாலைகள் மேம்பாட்டு பணி: அமைச்சர் தொடக்கம்

செய்யாறு ஒன்றியத்தில் ரூ.142 கோடியில் கிராமப்புற சாலைப் பணிகளை அமைச்சர் எ.வ.வேலு தொடக்கி வைத்தார்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
செய்யாறு ஒன்றியத்தில் கிராம சாலைகள் மேம்பாட்டு பணி: அமைச்சர் தொடக்கம்
X

கிராம சாலைகள் மேம்பாட்டு பணி அமைச்சா் எ.வ.வேலு பூமி பூஜை செய்து பணிகளைத் தொடங்கிவைத்தாா்

செய்யாறு ஒன்றியத்தில் ரூ.142 கோடியில் கிராமப்புற சாலை பணியை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஊராட்சி ஒன்றியம் தண்டரை கிராமத்தில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாய விலை கடை திறப்பு மற்றும் முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் சாலை அமைக்கும் பணி தொடக்க விழா ஆகியவை நடந்தது.

நிகழ்ச்சிக்கு துணை சபாநாயகர் பிச்சாண்டி தலைமை தாங்கினார். கலெக்டர் முருகேஷ், செய்யாறு சாா்- ஆட்சியா் அனாமிகா, ஆரணி விஷ்ணுபிரசாத் எம்.பி., ஜோதி எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு விருந்தினராக பொதுப் பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு புதிதாக கட்டப்பட்ட நியாய விலைக் கடைகளை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு ரேஷன் பொருள்களை விநியோகம் செய்து தொடக்கி வைத்தார்.

அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கிராமச் சாலைகளை சீா்படுத்துவதற்காக, முதலமைச்சரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.4 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கிராமப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தில் 5 வருடங்கள் பராமரித்தல் பணி தொடங்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் இருக்கின்ற தரைப்பாலங்கலெல்லாம் மேம்பாலங்களாக மாற்ற வேண்டும் என்றும், இந்த 5 ஆண்டு காலத்திலேயே அவற்றை நிறைவு செய்யப்பட வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டதால் தற்போது 60 சதவித வேலைகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. அடுத்த 3 ஆண்டுகளில் மீதமுள்ள தரைமட்டப் பாலங்கள் உயர் மட்டப் பாலங்களாக உயர்த்தப்படும்.

மலைக் கிராமத்தில் பாம்பு கடித்த குழந்தை சாலை வசதி இல்லாததால் மருத்துவமனைக்கு நடந்தே கொண்டு செல்லப்பட்டதால் இறந்த சம்பவம் குறித்து கேட்டதற்கு, கடந்த 10 ஆண்டுகளாக எந்தச் சாலையும் சீரமைக்கப்படவில்லை. அந்தச் சாலைகளெல்லாம் சீரமைக்க வேண்டி ரூ.4 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் நடந்த பகுதி மலைப் பகுதி என்பதால், வனப் பகுதியில் உள்ள நிலத்தை கையகப்படுத்தினால் தான், உள்ளாட்சித் துறை சம்பந்தப்பட்ட சாலை ஒன்றிய, ஊராட்சி சாலையாக இருந்தாலும், நெடுஞ்சாலைத் துறை சாலையாக இருந்தாலும் அந்தப் பகுதியில் சாலை அமைக்க முடியும்.அந்தப் பகுதியில் சாலை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றாா் அமைச்சர் எ.வ.வேலு.

முன்னதாக, தண்டரை கிராமத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.14.08 லட்சத்தில் கட்டப்பட்ட நியாய விலைக் கடையை அமைச்சா் திறந்து வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் திமுக மாநில மருத்துவரணி துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், எம்.எல்.ஏ.க்கள் கிரி, அம்பேத்குமாா், சி.என்.அண்ணாதுரை எம்.பி, ஒன்றியக் குழுத் தலைவா் டி.ராஜீ (வெம்பாக்கம்) உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Updated On: 30 May 2023 12:34 AM GMT

Related News

Latest News

 1. சினிமா
  குணசேகரன் ரகசியத்தை உடைத்த எதிர்நீச்சல் இயக்குநர்! இதனாலதான்...
 2. தமிழ்நாடு
  முதல்வரின் அறிவிப்பு.. சிறப்பான அங்கீகாரம்: டாக்டர் அன்புமணி பாராட்டு
 3. டாக்டர் சார்
  caladryl lotion uses in tamil சரும நோய்களுக்கு நிவாரணம் அளிக்கும் ...
 4. சோழவந்தான்
  சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி...
 5. வானிலை
  தமிழகத்தின் 15 மாவட்டங்களில் கனமழை: சென்னை வானிலை மையம்
 6. அருப்புக்கோட்டை
  காரியாபட்டி பேருந்து நிலைய விரிவாக்க பணிக்கு, ஆக்கிரமிப்பை அகற்ற...
 7. டாக்டர் சார்
  cipco pharmaceuticals தொற்று நோய்களை எதிர்த்துப் போராட சிப்கோ வைரஸ்...
 8. சேலம்
  “ஏற்காடு எங்கள் பெருமை” விழிப்புணர்வு நடைப்பயணம்: எம்எல்ஏ, ஆட்சியர்...
 9. லைஃப்ஸ்டைல்
  Betrayal quotes in tamil-துரோகித்து வெல்வதைவிட நேர்மையாக தோற்பது...
 10. தமிழ்நாடு
  mavattam in tamilnadu தமிழக மாவட்டங்களின் சிறப்பு பற்றி தெரியுமா...