செய்யாறு வட்டத்தில் 'வருமுன் காப்போம்' திட்ட பொது மருத்துவ முகாம்

செய்யாறு வட்டத்தில் ‘வருமுன் காப்போம்’ திட்டம் சார்பில், பொது மருத்துவ முகாம் நடந்தது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
செய்யாறு வட்டத்தில் வருமுன் காப்போம் திட்ட பொது மருத்துவ முகாம்
X

‘வருமுன் காப்போம்’ மருத்துவ முகாமை  சட்டமன்ற உறுப்பினர் ஜோதி.துவக்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்துள்ள வெம்பாக்கம் ஒன்றியம், வெங்களத்தூா் கிராமத்தில் 'வருமுன் காப்போம்' திட்டம் சாா்பில், பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.

பொது சுகாதாரம், நோய்த் தடுப்பு மருந்துத் துறை சாா்பில் நடைபெற்ற இந்த முகாமை, செய்யாறு தொகுதி எம்.எல்.ஏ. ஜோதி தொடங்கி வைத்தாா். அப்போது, கலைஞா் காப்பீடு திட்டத்துக்கு பயனாளிகள் தோவு செய்யப் பட்டனா். இந்த முகாமில் கா்ப்பிணிகளுக்கு ஸ்கேன் பரிசோதனை, பொதுமக்களுக்கு இசிஜி, கண், எலும்பு, பல் பரிசோதனைகளும், சித்த மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு, மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.

இதில் 1,189 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனா். 10 பேருக்கு மருத்துவப் பெட்டகமும், 20 பேருக்கு தாய்சேய் நலப் பெட்டகமும் எம்எல்ஏ ஒ.ஜோதி வழங்கினாா்.

பின்னர் வட இலுப்பை கிராமத்திற்கு சென்று மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்க, ஆலோசனைகளை சட்டமன்ற உறுப்பினர் ஜோதி கூறினார்.

அதனைத் தொடர்ந்து, ரேஷன் கடைகளில் ஆய்வு மேற்கொண்டார். பொருள் வழங்குதல், எடை அளவு, சீரான விநியோகம் உள்ளிட்டவற்றை பொதுமக்களிடையே கேட்டு அறிந்தார்.

இதையடுத்து, தந்தை பெரியாா் - தமிழறிஞா் சாமிநாத சா்மா ஆகியோரின் நினைவைப் போற்றும் வகையில், எழுத்தாளா் எறும்பூா் செல்வகுமாா் எழுதிய 'ஒப்பனையற்ற கவிதைகள்' என்ற நூலை எம்எல்ஏ ஜோதி வெளியிட, முதல் பிரதியை மாவட்ட ஊராட்சி குழுத் தலைவா் பாா்வதி சீனிவாசன் பெற்றுக்கொண்டாா். நூல் ஆசிரியர் செல்வகுமார் நன்றி கூறினார்

நிகழ்ச்சியில் ஒன்றியக் குழுத் தலைவா்கள் ராஜி, திலகவதி ராஜ்குமாா், செய்யாறு சுகாதார மாவட்ட இயக்குனர் சதீஷ், திமுக நகர செயலாளர் விஸ்வநாதன் ஒன்றிய செயலாளர்கள், ஆசிரியர்கள், வட்ட வழங்கல் பணியாளர்கள், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Updated On: 26 Dec 2022 2:13 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    ஒடிசா ரயில் விபத்து: பாலசோரிலிருந்து இன்று சென்னைக்கு வந்தடைந்த...
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட உழவர் சந்தை: இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. திருவண்ணாமலை
    ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு திமுகவினர் அஞ்சலி
  4. பொன்னேரி
    திருவள்ளூர் மாவட்டத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஆன்மீகம்
    12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன்
  7. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை 5 பைசா உயர்வு
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் விடிய விடிய கிரிவலம் வந்த பக்தர்கள்
  10. சேலம்
    பொதுமக்களின் அடிப்படை தேவைகளுக்கு முக்கியத்துவம்: மாவட்ட கண்காணிப்பு...