ரூ.1.25 லட்சம் மதிப்பிலான கஞ்சா விற்பனை செய்த இரு இளைஞர்கள் கைது

செய்யாறு அருகே ரூ.1.25 லட்சம் மதிப்பிலான கஞ்சா விற்பனை செய்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ரூ.1.25 லட்சம் மதிப்பிலான கஞ்சா விற்பனை செய்த இரு இளைஞர்கள் கைது
X

கஞ்சா விற்பனை செய்த 2 வாலிபர்களை கைது செய்த காவல்துறையினர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டி.எஸ்.பி. வெங்கடேசன் தலைமையில் போதை பொருள் தடுப்பு நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ரகசிய தகவலின் பேரில் பல்லி கிராமத்திற்கு சென்று போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகப்படும்படியாக நின்றிருந்த வாலிபரை மடக்கி விசாரணை செய்தபோது அவரும் அவருடன் இருந்தவரும் கஞ்சாவை மறைத்து வைத்து விற்பனை செய்ததும் அவர்கள் பல்லி கிராமத்தைச் சேர்ந்த ராஜாராம் மகன் மணிகண்டன் என்பதும் மற்றொருவர் அதே பகுதியைச் சேர்ந்த திருமலை என்பவரின் மகன் அருண்குமார் என்பதும் தெரியவந்தது.

இவர்கள் சென்னை பகுதியில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து சிறிது சிறிதாக பிரித்து பிளாஸ்டிக் கவரில் அடைத்து விற்பனை செய்துள்ளனர். இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ஒரு கிலோ எடையுள்ள தலா 5 கிராம் எடையுள்ள 40 பாக்கெட்டுகளை கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் ஆகும்.

Updated On: 12 Sep 2022 7:06 AM GMT

Related News