Begin typing your search above and press return to search.
தூசி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதலில் தொழிலாளி உயிரிழப்பு
வெம்பாக்கம் தாலுகா தூசி அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதலில் தொழிலாளி உயிரிழந்தார்.
HIGHLIGHTS

வெம்பாக்கம் தாலுகா தூசி அருகே உள்ள பில்லாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 50). கூலி தொழிலாளி. இவர், நேற்று பாண்டியன் பாக்கம் கிராமத்தில் வேலைக்கு சென்று விட்டு மோட்டார்சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தார். இரவு 8 மணி அளவில், பில்லாந்தாங்கல் மெயின் ரோட்டில் வந்தபோது எதிரே வந்த மோட்டார்சைக்கிளும் இவரது மோட்டார்சைக்கிளும் மோதிக்கொண்டன.
இதில், திருநாவுக்கரசு தூக்கி வீசப்பட்டு, தலையில் பலத்த காயம் அடைந்து, அதே இடத்தில் இறந்து விட்டார். தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று, திருநாவுக்கரசு உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து அவருடைய மகன் வினோத்குமார் கொடுத்த புகாாின் பேரில் தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.