Begin typing your search above and press return to search.
அரசு பள்ளிகளில் புகையிலை இல்லா கல்வி நிறுவனங்கள் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு
செய்யாறு அருகே 21 பள்ளிகளில் புகையிலை இல்லா கல்வி நிறுவனங்கள் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது
HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகா அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட 21 அரசு பள்ளிகளில் புகையிலை இல்லா கல்வி நிறுவனங்கள் என்று விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு உள்ளது.
அதன்படி கல்வி நிறுவனத்தை சுற்றி 300 அடி தூரம் வரை புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்ய கோப்டா 2003. சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது என்ற விளம்பர அறிவிப்பு பலகை பள்ளிகளில் வைக்கப்பட்டுள்ளது.
குத்தனூர் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் உதயகுமார் முன்னிலையில் சுகாதார ஆய்வாளர் சம்பத் புகையிலை இல்லா கல்வி நிறுவனம் என்ற விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டினார்.