திருவண்ணாமலை: வெம்பாக்கம் அருகே வீடு புகுந்து நகை திருடிய சிறுவன் கைது
வெம்பாக்கம் அருகே வீடு புகுந்து நகை திருடிய சிறுவன் கைது
HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அருகே வீடு புகுந்து நகை திருடியது தொடர்பாக சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
வெம்பாக்கம் அருகே உள்ள வெங்களத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி (வயது 49), விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இவர் தனது மகளை காவேரிப்பாக்கத்தில் திருமணம் செய்து கொடுத்துள்ளார். இவரது மருமகன் சபரிமலை யாத்திரை செல்வதற்காக பூஜையில் கலந்துகொள்ள மருமகன் வீட்டுக்கு 25-ந்தேதி சென்றுள்ளார். 2 நாள் கழித்து வீட்டிற்கு வந்தபோது வீட்டிற்குள் இருந்த பீரோவை திறந்து மர்மநபர்கள் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள 2 தங்க மோதிரங்களை திருடிச் சென்றுள்ளது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து பிரம்மதேசம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இன்று நடத்திய விசாரணையில் அதே கிராமத்தை சேர்ந்த ஐ.டி.ஐ. படிக்கும் மாணவர், மற்றும் பிளஸ் டூ முடித்துவிட்டு வீட்டில் இருக்கும் 18 வயதை சேர்ந்த ஒருவர். இவர்கள் இருவரும் குடிசை வீட்டின் பின்புறம் சுவர் ஏறி குதித்து நகையை திருடிச் சென்றது தெரியவந்தது.
வெம்பாக்கத்தில் உள்ள அடகு கடையில் திருடிய நகைகளை அடகு வைத்து பணத்தை மது குடித்து செலவு செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து 18 வயது சிறுவனை கைது செய்தனர். தப்பி ஓடிய ஐ.டி.ஐ. மாணவனை தேடி வருகின்றனர்.