Begin typing your search above and press return to search.
வீட்டில் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
செய்யாறு அருகே வீட்டின் பீரோவை உடைத்து நகை, பணம் திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்
HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா ஆக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் தாந்தோணி அம்மாள் ( 51).
இவருக்கு இரு மகள்கள் உள்ளனர். தனியாக இருக்கும் தாந்தோணி அம்மாள் கடந்த 22-ந்தேதி தனது வீட்டை பூட்டிக்கொண்டு பூ வியாபாரத்துக்கு சென்னை சென்றுள்ளார்.
மீண்டும் காலை 7 மணிக்கு வீட்டுக்கு வந்தார். வீட்டைத் திறந்து உள்ள சென்றபோது பீரோ உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் வைத்திருந்த 10 பவுன் நகை, பணம் ரூ.55 ஆயிரம், வீட்டு உபயோக பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது.மர்ம நபர்கள் வீட்டின் மாடி வழியாக உள்ளே சென்று நகை, பணத்தை திருடி சென்றுள்ளனர்.இது குறித்து தாந்தோணியம்மாள் தூசி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.