செய்யாறு அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

செய்யாறு அருகே தூக்கிட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
செய்யாறு அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
X

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே தூக்கிட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள செய்யாற்றை வென்றான் பகுதியை சேர்ந்தவர் தணிகைவேல். இவரது மகள் வளர்மதி(19). இவர் செய்யாறில் உள்ள கடை ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் வளர்மதிக்கு, அதே பகுதியை சேர்ந்த விநாயகம் என்பவர் பாலியல் ரீதியாக தொல்லை அளித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த வளர்மதியின் பெற்றோர், அவரை கண்டித்துள்ளனர். இதனால் வளர்மதி குடும்பத்தினருக்கும், விநாயகம் குடும்பத்திற்கும் இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில், வளர்மதியை, விநாயகத்தின் மனைவி புனிதா கிராமத்தினர் முன்னிலையில் செருப்பால் அடித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த வளர்மதி தனது வீட்டில் துக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலின் பேரில் அனக்காவூர் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் போலீசார், விநாயகம் மற்றும் அவரது மனைவி புனிதா மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 19 Jun 2022 6:34 AM GMT

Related News

Latest News

 1. திருவாடாணை
  மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுக இனிஷியலை போட்டுக் கொள்கிறது.
 2. திருப்பரங்குன்றம்
  பாஜக. எம்.பி.யைக் கண்டித்து மதுரையில், ஜனநாயக மாதர் சங்கம் ரயில்...
 3. குமாரபாளையம்
  ஒரு நபருக்கு ஒரு பாட்டில்: டாஸ்மாக் கண்காணிப்பாளர்களுக்கு...
 4. திருவில்லிபுத்தூர்
  சதுரகிரி மகாலிங்கம் மலையில் குவிந்த பக்தர்கள் கூட்டம்
 5. குமாரபாளையம்
  பா.ம.க. சார்பில் தபால் அனுப்பும் போராட்டம்
 6. சோழவந்தான்
  பாலமேடு அருகே தொட்டியச்சி அம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேகம்
 7. ஈரோடு
  ஈரோடு மாவட்டத்தில் 130 டன்‌ விதைகள் கையிருப்பில் உள்ளதாக தகவல்
 8. ஈரோடு
  பவானிசாகர் அருகே சிறுத்தை தாக்கியதில் கன்றுக்குட்டி உயிரிழப்பு
 9. பெரம்பலூர்
  பெரம்பலூரில் பனை மற்றும் காதி கிராப்ட் பொருட்கள் விற்பனை அங்காடி...
 10. ஆன்மீகம்
  கோவையில் மழை பெய்ய வேண்டி அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும்