செய்யாறு சார் ஆட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

செய்யாறு சார் -ஆட்சியரின் செயல்களைக் கண்டித்து, அவரது அலுவலக வளாகத்தில் கிராம நிா்வாக அலுவலா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
செய்யாறு சார் ஆட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
X

உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட  கிராம நிர்வாக அலுவலர்கள் .

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சார் ஆட்சியர் அனாமிகாவின் தொடர் ஊழியர் விரோத போக்கை கண்டித்தும், வெம்பாக்கம் வட்ட கிளை உறுப்பினர் பச்சையப்பனை எவ்வித முகாந்திரமும் இன்றி, சேத்துப்பட்டு வட்டத்திற்கு பணியிட மாறுதல் செய்து உத்தரவிட்டதை ரத்து செய்து மீண்டும் அவரை அதே இடத்தில் பணியிடம் வழங்கிட வலியுறுத்தி செய்யாறு வருவாய் கோட்டத்தில் உள்ள செய்யாறு, வந்தவாசி, வெம்பாக்கம், சேத்துப்பட்டு ஆகிய நான்கு தாலுகா கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, கடந்த மாதம் 31-ந்தேதி இணையதளம் தொடர்பான பணிகளை புறக்கணித்தனர். நேற்று முன்தினம் செய்யாறு கோட்டத்தில் உள்ள 262 கிராம நிர்வாக அலுவலர்கள் ஓட்டு மொத்தமாக ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்தனர்.

தொடர்ந்து நேற்று செய்யாறு வருவாய் கோட்டத்தில் பணியாற்றும் அனைத்து அலுவலர்களும் உதவி கலெக்டர் அலுவலகத்தினை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் ஏழுமலை முன்னிலை வகித்தார். இதில் மாநில பொது செயலாளர் சுரேஷ் கலந்துகொண்டு கோரிக்கை வலியுறுத்தி பேசினார்.

செய்யாறு சார் ஆட்சியர் அனாமிகா ஊழியர் விரோத போக்கை கண்டித்து திருவண்ணாமலை வட்டத்தில் ஆன்லைன் சான்றிதழ்கள் வழங்குவது நிறுத்தப் போவதாக தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது . இதன் தொடர்ச்சியாக வட்டாட்சியர் சுரேஷிடம் சங்க நிர்வாகிகள் அறிவிப்பு கடிதம் கொடுத்தனர்.

நாளை (வெள்ளிக்கிழமை) திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களும் விடுப்பு எடுத்து செய்யாறு உதவி கலெக்டர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர் என தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

Updated On: 5 Jan 2023 4:21 AM GMT

Related News

Latest News

 1. இந்தியா
  காலையில் தாசில்தார்- மாலையில் முன்னாள் தாசில்தார்: இங்கல்ல...
 2. அரசியல்
  மேகதாது அணை விவகாரம்: ஸ்டாலினும், சிவகுமாருக்கு வாழ்த்து சொல்வாரோ?
 3. அவினாசி
  அவிநாசி பகுதியில் ரூ.7.81 கோடியில் திட்டப்பணிகள்; கலெக்டர் ஆய்வு
 4. காஞ்சிபுரம்
  சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளிய காஞ்சி ஸ்ரீ வரதராஜ பெருமாள்
 5. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் டாஸ்மாக் பார் உரிமையாளர்களுடன் போலீசார் ஆலோசனை
 6. தமிழ்நாடு
  இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜிக்கு விதிக்கப்பட்ட அபராதத்துக்கு இடைக்கால...
 7. திருப்பூர் மாநகர்
  விபத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு வழங்காததால் 2 அரசு பஸ்கள் ஜப்தி
 8. தூத்துக்குடி
  புகையிலை பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகள்; கருத்தரங்கில் அதிர்ச்சி...
 9. நாமக்கல்
  உயிருடன் உள்ள தாய்க்கு சிலை வைத்து வழிபடும் மகன்: கூலிப்பட்டி கிராம...
 10. தமிழ்நாடு
  நெல்கொள்முதல் நிலையங்களில் பயோமெட்ரிக் முறை இன்று முதல் அமல்