Begin typing your search above and press return to search.
விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்த 3 குடோன்களுக்கு சீல்
திருவண்ணாமலை மாவட்டம் தூசி அருகே விநாயகர் சிலைகள் வைத்திருந்த 3 குடோன்களுக்கு சீல் வைக்கப்பட்டது.
HIGHLIGHTS

குடோன்களுக்கு சீல் வைக்கும் அதிகாரிகள்.
இந்துக்கள் பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 10-ந் தேதி கொண்டாடப்படுகிறது. தற்போது கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொது இடங்களில விநாயகர் சிலைகள் வைக்க அரசு தடை விதித்துள்ளது. இதனால் வெம்பாக்கம் தாசில்தார் குமரவேல் மற்றும் வருவாய் துறையினர் போலீசாருடன் இணைந்து, பொது இடங்களில் வைக்கக்கூடிய விநாயகர் சிலைகள் செய்து வைத்திருந்த குடோன்களை ஆய்வு செய்தனர்.
அப்போது வெம்பாக்கம் தாலுகா தூசி அருகே அப்துல்லாபுரம் கிராமத்தில் 25 விநாயகர் சிலைகள் செய்து வைத்திருந்ததை கண்டறிந்து அந்த குடோனுக்கு சீல் வைத்தனர். அதேபோல் பிரம்மதேசம் கிராமத்தில் 2 குடோன்களில், 25 அடி உயரம் வரையிலான விநாயகர் சிலைகள் செய்து வைக்கப்பட்டிருந்தது. அந்த இரண்டு குடோன்களுக்கும் சீல் வைக்கப்பட்டது.