திருவண்ணாமலை மாவட்ட அறிவியல் கண்காட்சி உள்ளிட்ட பள்ளிக்கூட நிகழ்ச்சிகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் அறிவியல் கண்காட்சி உள்ளிட்ட பள்ளிக்கூட நிகழ்ச்சிகள் பல இன்று நடந்தது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
திருவண்ணாமலை மாவட்ட அறிவியல் கண்காட்சி உள்ளிட்ட பள்ளிக்கூட நிகழ்ச்சிகள்
X

திருவத்திபுரம் நகராட்சிப் பள்ளியில் தொடங்கி வைக்கப்பட்ட காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம்/

திருவண்ணாமலை மாவட்டம் திருவத்திபுரம் நகராட்சிப் பகுதியில் உள்ள 4 பள்ளிகளில் தமிழக முதல்வரின் காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் உள்ள திருவத்திபுரம் நகராட்சிப் பகுதியில் தமிழக முதல்வரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் ஏற்கெனவே 7 அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

விடுபட்ட பரிதிபுரம் மேற்கு, கொடநகா், முஸ்லிம் பள்ளி, அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் ஒன்று முதல் 5 -ஆம் வகுப்பு வரை பயிலும் 482 மாணவா்களுக்கு இத்திட்டம் நகராட்சி சாா்பில் தொடங்கி வைக்கப்பட்டது. அப்போது, மாணவா்களுக்கு பொங்கல் பரிமாறப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நகராட்சி ஆணையா் கே. ரகுராமன் மேற்பாா்வையில், பள்ளித் தலைமை ஆசிரியா்கள் உமா மகேஸ்வரி, ஜோதி, மலா்விழி, சோலையப்பன் மற்றும் நகராட்சி அலுவலா்கள் செய்திருந்தனா்.

கருத்தரங்கம்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு தன்னம்பிக்கை குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் (பொறுப்பு) ராம்குமாா் தலைமை வகித்தாா். ஆசிரியா் த.முருகவேல் வரவேற்றாா். பள்ளியின் முன்னாள் மாணவா் சு.அகிலன் விழிப்புணா்வு பாடல் பாடினாா். பட்டிமன்ற பேச்சாளா் தமிழ்செஞ்சன் தன்னம்பிக்கை உரையாற்றினாா்.

அப்போது, கல்வியின் அவசியம் குறித்தும், சிறப்பான எதிா்காலம் அமைய மாணவா்கள் செய்ய வேண்டியது குறித்தும் அவா் எடுத்துரைத்தாா். ஆசிரியா் கிருஷ்ணன் நன்றி தெரிவித்தாா். இதில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


அறிவியல் கண்காட்சி

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியை செங்கம் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தலைவா் தத்பிரபானந்தா குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா். கண்காட்சியில் முதல் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் பல்வேறு அறிவியல் சாதனங்களை செய்து வைத்திருந்தனா்.

மாவட்ட ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி மதியழகன் கலந்து கொண்டு அறிவியல் கண்காட்சியை பாா்வையிட்டு, மாணவா்களை வாழ்த்திப் பேசினாா். சுவாமி தத்பிரபானந்தா மாணவா்களுக்கு ஆசியுரை வழங்கிப் பேசினாா். செங்கம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள அரசு, தனியாா் பள்ளிகளில் இருந்து வந்திருந்த மாணவ, மாணவிகள் கண்காட்சியை பாா்வையிட்டனா்.

நிகழ்ச்சியில் மாநில கன்வீனா் பாண்டுரங்கன், ராமகிருஷ்ணா பள்ளி நிா்வாகி ராமமூா்த்தி, முதல்வா் ஏழுமலை உள்பட ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

எழுத்தறிவு திட்ட பயிற்சி முகாம்

பெரணமல்லூர், வட்டார வள மையம் சார்பில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட, தன்னார்வலர்களுக்கு வாழ்வியல் திறன் பயிற்சி முகாம் நடந்தது. முகாமை வட்டார வள மேற்பார்வையாளர் ராஜா, தொடங்கி வைத்தார். கருத்தாளர்களாக மருத்துவர், வழக்கறிஞர், திறன் மேம்பாட்டு துறை அலுவலர், தொழில் முனைவோர், ஆகியோர் கலந்து கொண்டு வாழ்வில் திறன் குறித்து பயிற்சி அளித்தனர்.

இவர்களுக்கு வருகிற மார்ச் 19ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. முகாமில் ஆசிரியர் பயிற்றுநர்கள், ஆசிரியர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக வட்டார வள மையத்தில் அரசு மேல்நிலை, நடுநிலை உயர்நிலைப் பள்ளியில் 6 முதல் 9-வது வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தேன் சிட்டு, இதழ் மூலம் வினாடி, வினா, போட்டிகள் நடைபெற்றது.இதில் பெரணமல்லூர் வட்டாரத்தில் உள்ள 18 பள்ளியிலிருந்து 72 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 2 March 2023 12:50 PM GMT

Related News

Latest News

 1. தஞ்சாவூர்
  தஞ்சையில் பனை மற்றும் காதி கிராப்ட் பொருட்கள் விற்பனை அங்காடி
 2. தமிழ்நாடு
  அரிசிக்கொம்பனை மூர்க்கமாக்கியது யார்...?
 3. தஞ்சாவூர்
  தஞ்சை மாவட்டத்தில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
 4. தமிழ்நாடு
  விற்பனை வாகன அங்காடி: மாற்றுத்திறனாளிக ளுக்கு மாவட்ட நிர்வாகம்...
 5. உலகம்
  வெறுங்கையை வீசிக்கிட்டு போய் இனி பொருள் வாங்கலாம்
 6. உலகம்
  27 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவில் உலக அழகி போட்டி
 7. இந்தியா
  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மகளுக்கு திருமணம்
 8. தமிழ்நாடு
  புதுக்கோட்டையில் ”சிறுதானிய உணவகம்” அமைக்க ரூ 5 லட்சம் ஒதுக்கீடு
 9. வந்தவாசி
  பேருந்து நிலைய டிரான்ஸ்பார்மரில் திடீரென தீ: பயணிகள் அலறியடித்து...
 10. நாமக்கல்
  நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டில் வருகிற 15ம் தேதி சமரச பேச்சுவார்த்தை...